Monday, 12 September 2011

டெல்லி குண்டுவெடிப்பு : காவி பயங்கரவாதத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

ஐதராபாத்: டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்கான விசாரணையில் காவி பயங்கரவாதத்தையும் உட்படுத்த வேண்டும் என ஐதராபாத்தைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் 90ற்கும் மேற்பட்டோர்  படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு அப்பாவியின் குரல்!


டெல்லி: கடந்த புதனன்று டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு கோழைத்தனமானது மட்டும்மல்லாமல் மிருகத்தனமானது என்பதாக பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது டெல்லி சிறையில் வாடிவரும் அப்சல் குரு கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக எகிப்திய மக்கள் ஆர்ப்பாட்டம்

Security forces stand aside as hundreds of activists demolish a concrete wall protecting a building housing the Israeli Embassy in Cairo, Egypt, on Friday. Amr Nabil/Associated Pressஎகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் தாக்கியுள்ளனர். எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரகம் அமைந்துள்ள கட்டிடம் மக்களால் சுற்றி வளைத்து தாக்கப்பட்டுள்ளது  முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, இராணுவம் இடைகால நிர்வாகம் ஏற்பட்டதன் பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

குஜராத் கலவரம்: நரேந்திர (நரபலி) மோடியை விசாரிப்பது குறித்து கீழ் கோர்ட் முடிவு செய்யலாம் - உச்ச நீதிமன்றம்

டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அகமதபாத் நகரில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த பயங்கர வன்முறையில் 69 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இது தொடர்பான விசாரணை அறிக்கையை கீழ் நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யுமாறு மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.