Thursday, 30 June 2011

முஸ்லிம்களின் பாதுகாப்பே! பாப்புலர் ஃப்ரண்டின் உயிர் மூச்சு

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்பு சகோதரர்களே,

இன்று உம்மத்தின் பாதுகாப்பு என்ற பணியை அல்லாஹ்வின் உதவியால் பாப்புலர் ஃப்ரண்ட் மட்டுமே இந்தியா முழுவதும் செய்கிறது. சென்னை, திண்டுக்கல், முத்துப்பேட்டை போன்ற இடங்களில் விநாயகர் சதுரத்தி என்ற பெயரில் முஸ்லிம்களை அச்சுறுத்தல், பல கிராமங்களில் முஸ்லிம் பெண்களிடம் முஸ்லிம் என்பதற்காக குறி வைத்து கேலி செய்தல்,
முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக நினைத்து ஆங்காங்கே தாக்குதல், கொலைகள் இப்படி எத்தனையோ சம்பவங்கள்.....தமிழகத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன் நடந்த கொடுமைகளை இப்போதைய இளந் தலைமுறை தெரிந்திருக்க கூட வாய்பில்லை...

ஹிந்துத்துவாவின் கைகளில் இந்திய பத்திரிகை கவுன்சில்!

புதுடில்லி : பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராக, "தினமலர்' வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி உட்பட 27 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.  இது மத்திய அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான தேர்வு. தினமலர் பத்திரிகை என்பது ஹிந்துத்துவா பத்திரிகை ஆகும்.

சவுதி அரேபியாவில் கார் ஓட்டிய பெண்கள் கைது

ரியாத் :  சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடையுள்ள நிலையில், கார் ஓட்டிச் சென்ற ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.


உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பெண்கள் கார் ஓட்ட தடை உள்ளது. சட்ட ரீதியான தடையில்லை என்றாலும், மத ரீதியான வாய்மொழி உத்தரவாக அமலில் உள்ளது. 1960ல், சவுதி அரேபியாவில் பெண்கள் கல்வியில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

சமச்சீர் கல்விக் குழுவின் ஆய்வு முடிந்தது-ஜூலை 5ல் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஜூலை 5ம் தேதி இக்குழு தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது.



வடகொரியாவில் அவலம்: புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்

வடகொரியாவில் ரேஷனில் வழங்கும் உணவுப் பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் புற்களை சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


வடகொரியாவில் ஏழைகள் என கருதப்படும் 23 லட்சம் மக்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.