Saturday, 2 July 2011

பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்

பிரிட்டனில் பாலியல் நோக்கங்களுக்காக வயது குறைந்த சிறுமியரை தெருக்களில் அலைய விடும் நபர்களுள் நான்கில் ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை மதிப்பீடு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.


கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களில் அடிக்கடி ஈடுபட்டவர்கள் என்று 2379 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களுள் 28 வீதமானவர்கள் ஆசியநாட்டவர்கள்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் யு.எஸ். நடத்திய உலகளாவிய தாக்குதல்களில் 2.25 லட்சம் பேர் பலி


வாஷிங்டன்: 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியா: தீ விபத்தில் 6 இந்தியர்கள் பலி

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் அருகே அல் பதா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் 2 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதய ஆரோக்கியத்துக்கு.....


ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

கோவையில் மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்க்கான வழிகாட்டுதல் முகாம்

பொள்ளாச்சி பகுதியில் மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறத் தேவையான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. இதில் பெருந்திரலான மாணவ, மனைவியர்  கலந்து பயனடைந்தனர்.


புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதீப் குமார் தேர்வு

டெல்லி: புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பாதுகாப்புத்துறை செயலாளர் பிரதீப் குமார் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மன்மோகன் சிங், சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் இன்று பிரதமரின் இல்லத்தில் கூடி, புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரைத் தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.

சிரியாவில் ராணுவம் துப்பாக்கிச் சூடு: 14 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் முதல் பொது மக்கள் போராடி வருகின்றனர்.

போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களம் இறக்கி விடப்பட்டுள்ளது. கலவரத்தில் இதுவரை 1350 பொது மக்களும், 350 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

தமிழக பொலிஸ் அதிகாரிகளில் இருபது பேர் கோடீஸ்வரர்கள்

தமிழக பொலிஸ் அதிகாரிகளில் 20 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது.

தமிழக பொலிஸ்துறையில் மொத்தம் 169 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 20 பேர் கோடீஸ்வரர்கள்.77 தமிழக பொலிஸ் துறை அதிகாரிகள் தங்கள் சொத்து விபர பட்டியலை வெளியிட்டனர். அதில் இருந்து தான் இந்த தகவல் கிடைத்துள்ளது.

லெபனான் முன்னாள் பிரதமரின் படுகொலை விசாரணையில் நால்வருக்கு எதிராக கைதாணை ஐ.நா. வின் லெபனானுக்கான விசேட தீர்ப்பாயம்

லெபனான் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரியின் படுகொலை குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஐ.நா. வின் லெபனானுக்கான விசேட நீதிமன்றம் நான்கு பேருக்கு எதிராக கைதாணை பிறப்பித்துள்ளது.
இதனை வரவேற்றுள்ள ஹரிரியின் மகன் சாட் ஹரிரி,இது லெபனானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தருணமெனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு கேபிள் டீவி, ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பிற்காக கீழ் உள்துறைக்கு மாற்றம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு கேபிள் டீவியை, தனது கட்டுப்பாட்டில் உள்துறைக்கு மாற்றியுள்ளார்.


6 பழங்குடி மக்கள் படுகொலை : மத்திய ரிசர்வ் படையினரின் சீருடையில் மாவோஜிஸ்டுக்கள் தாக்குதல்?

பீகார் தலைநகர் பாட்னாவுக்கு அருகில் உள்ள மங்கர் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் 6 பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பீட்டர் புர்லேக் : இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்க தூதராக நியமனம்

புதுதில்லி : இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்க தூதராக பீட்டர் புர்லேக் நேற்று (ஜுலை 1)  நியமிக்கப்பட்டார்.

திமோதி ஜி.ரோமர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை அடுத்து, புதிதாக தூதர் நியமனம் செய்யப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்:மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் உள்பட 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு


human rights violationமதுரை : பொய்வழக்கை பதிவு செய்தல் மற்றும் மனித உரிமைகளை மீறியது தொடர்பாக மதுரை நகர கமிஷனர் பி.கண்ணப்பன் உள்பட 6 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கனடா செய்தி கனடா நாளில் நாட்டு மக்கள் நிகழ்த்திய மனித தேசிய கொடி சாதனை

ஆயிரக்கணக்கான வின்னிபெக் மாகாண பகுதி மக்கள் சட்டமன்ற மைதானத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற டி-சர்ட்டுகளில் நேற்று குவிந்தனர். அவர்கள் கனடா நாள் கொண்டாட்டத்தில் மிகப் பெரும் தேசிய கொடியை உருவாக்கினார்கள்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:இரண்டு பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

பஞ்ச்குலா(ஹரியானா):சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேரை சிறப்பு நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை இம்மாதம் 18-ஆம் தேதி நடைபெறும். ராம்சந்திர கல்சங்க்ரா, சந்தீப் டாங்கே ஆகியோரை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.



ஈரான் போக்கு சரியில்லை!அமெரிக்கா புலம்பல்!!




இய‌க்குன‌ர் பாலா மீது காவ‌ல்துறை ஆணைய‌ரிட‌ம் புகா‌ர்

அவன்-இவனட‌த்‌‌தி‌லமு‌ஸ்‌லி‌மம‌க்களபு‌ண்படு‌த்‌திஇயக்குனரபாலமீதநடவடி‌க்கஎடு‌க்வே‌‌ண்டு‌‌மஎ‌ன்றசெ‌ன்னகாவ‌ல்துறஆணைய‌ரிட‌மதமிழ்நாடசுன்னதஜமாஅதபுகாரகொடுத்துள்ளது. 

'வெளிநாட்டு தொழிலாளர் வேண்டாம்'

பிரிட்டனில் குடியேறி வருபவர்களின் விவகாரம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால், இங்கு அடுத்த ஒரு தலைமுறையும் முற்றிலும் சமூகநல உதவித் திட்டங்களில் தங்கியிருக்கும் நிலைமை உருவாகிவிடும் என்று பிரிட்டனின் மூத்த அரசாங்க அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிகார் மாநிலத்தில்முஸ்லிம்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு ராகுல் ஆறுதல்

 பிகார் மாநிலம் அரரியா மாவட்டத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி

புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.