Saturday, 2 July 2011

கோவையில் மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்க்கான வழிகாட்டுதல் முகாம்

பொள்ளாச்சி பகுதியில் மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறத் தேவையான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. இதில் பெருந்திரலான மாணவ, மனைவியர்  கலந்து பயனடைந்தனர்.
















தேசிய அளவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கிகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களி்ல் பயிலும் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவ - மாணவியர்கள் 2011-12 ஆம் ஆண்டிற்கான பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி உதவித்தொகையை (புதுப்பித்தல் மற்றும் புதியது) பெற்றிட உடனே விண்ணப்பிக்கவும்.

நிபந்தனைகள்-



பள்ளி படிப்பு – ப்ரீ மெட்ரிக்
பள்ளி மேற்படிப்பு – போஸ்ட் மெட்ரிக்
வகுப்பு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை
11 மற்றும் 12 ஆம் வகுப்பு, வாழ்க்கை மற்றும் தொழில் கல்வி(வோகேஷனல்), ஐடிஐ, ஐடிசி, என்.சி.வி.டி, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு
பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.100,000 க்கு மிகாமல் இருக்கவேண்டும்
பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.200,000 க்கு மிகாமல் இருக்கவேண்டும்
முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் (1 ஆம் வகுப்பு நீங்கலாக) 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
முந்தைய ஆண்டின் தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
குடும்பத்தில் அதிக பட்சம் 2 பேருக்கு மட்டுமே இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
குடும்பத்தில் அதிக பட்சம் 2 பேருக்கு மட்டுமே இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவ/மாணவியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவ/மாணவியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
புதுப்பித்தலுக்கான(Renewal) இறுதி தேதி மற்றும் புதியதுக்கான (Fresh) இறுதி தேதி மாவட்டத்திற்கு மாவட்டம் வெவ்வேறு தேதிகளில் உள்ளது. தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கவும்.
புதுப்பித்தலுக்கான(Renewal) இறுதி தேதி மற்றும் புதியதுக்கான (Fresh) இறுதி தேதி மாவட்டத்திற்கு மாவட்டம் வெவ்வேறு தேதிகளில் உள்ளது. தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கவும்.



இந்த கல்வி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க மாணவ – மாணவியருக்கு உதவும் வகையில் தங்கள் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து கீழ்காணும் ஆவணங்களுடன் வர கேட்டுகொள்ளப்படுகிறார்கள்


1)   சென்ற வருட பள்ளி கூட ரேங்க் ரிப்போர்ட் – 1 ஆம் வகுப்பிற்கு தேவையில்லை (10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும்)

2)   கல்வி கட்டண விபரங்கள் – ஸ்கூல் பீஸ், ஸ்பெஸல் பீஸ், தேர்வு கட்டணம், வீடுதி கட்டணம் போன்ற கட்டாய கட்டணங்கள் விபரங்களை பள்ளி கூட அலுவலகத்தில் கேட்டு பெற்று கொண்டு வரவும். கல்லூரியில் பயில இருக்கும் மாணவர்கள் கல்லூரி அலுவலகத்திலிருந்து கட்டண விபரங்களை கல்லூரி அலுவலகத்தில் கேட்டு பெற்று கொண்டு வரவும்

3)   1.4.10 முதல் 31.3.11 வரையுள்ள வருவாய் துறையினரால் வழங்கப்பட்ட வருமான வரி சான்றிதழ் இருந்தால் கொண்டு வரவும் – அல்லது ரூ.10 க்கான ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி வரவும்

4)   சாதி சான்றிதழ் இருப்பின் கொண்டு வரவும் – அல்லது ரூ.10 க்கான ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி வரவும்

5)   பிறந்த தேதி சான்றிதழ்

6)   1 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

7)   வங்கி கணக்கு புத்தகம் அல்லது வங்கி பெயர் மற்றும் முகவரி, வங்கி கணக்கு எண், பெயர், கிளை பெயர், MICR குறியீடு போன்ற விபரங்கள்

8)   புதுப்பித்தாலாக இருப்பின் கீழ்கண்ட விபரம் தேவை –

·         முதலில் உதவித்தொகை பெற்ற ஆண்டு

·         எந்த வகுப்பு படிப்பிற்காக உதவித்தொகை பெறப்பட்டது

·         எந்த பள்ளிகூடத்தில் படிக்கும் போது உதவித்தொகை பெறப்பட்டது

·         உதவி தொகை

9)   10ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவர்களாக இருப்பின் 10 ஆம் வகுப்பிலிருந்து பெறப்பட்ட அனைத்து அரசு தேர்வுகளுக்கான சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வரவும்



பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் மற்றும் அபிடவிட் ப்ரிண்ட் அவுட் எடுத்து இலவசமாக வழங்ப்படும். தங்கள் படிவங்களை பூர்த்தி செய்யவும் உதவப்படும்.


இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களுக்கு வங்கி கணக்கு இருத்தல் அவசியம். இந்த வங்கி கணக்கு இல்லாதோர் வங்கு கணக்கு துவக்க  தங்கள் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்திற்கு கீழ்கண்ட ஆவணங்களுடன் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அழைத்து வரவும்.

1)   ரேஷன் கார்டு

2)   மாணவரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

3)   பள்ளி ஐ.டி கார்டு மற்றும் ரேங்க் கார்டு

No comments:

Post a Comment