வாஷிங்டன் : பயங்கரவாத ஒழிப்பு? மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில்,
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உதவியாளராக உள்ள பால் நிட்சி கூறியதாவது: அல் -
குவைதாவும், அதன் தலைவர் பின்லாடனும் செய்த காரியத்தை தான் ஈரான் செய்து
வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க, அமெரிக்கா முயற்சி செய்து
வருகிறது. இதற்காக, அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் பயிற்சிக் களமாகவும், அரங்கேற்றுத் தளமாகவும், பாகிஸ்தான் உள்ளது. தினசரி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகள், அந்த நாட்டில் புற்றுநோய் போல் பெருகி விட்டனர். அதை ஒழிக்க பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார். பல்வேறு நாடுகளின் உள் விவகாரக்களில் புகுந்து குழப்பம் செய்து வரும் அமெரிக்காவால் இரானை மட்டும் அடக்க முடியவில்லை.உலக நாடுகளில் இருந்து ஈரானை தனிமை படுத்தும் பணியிலும் அமெரிக்க ஈடுபட்டு வருகிறது.ஆப்கனிஸ்தான்மற்றும் இராக்கில் அராஜகம் செய்து அப்பாவி மக்களை தினம்தோறும் கொன்று குவித்துவரும் அமெரிக்க இரானை பற்றி கருது சொல்லி இருப்பது கொடுமையிலும் கொடுமை.ஈரான் தற்போது,கல்வி,பொருளாதாரம் , தொழில்வளர்ச்சி , பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முன்னேறிவருகிறது.மேலை நாடுகளால் சீரழிக்கப்பட்ட திரைப்பட துறையை கூட ஈரான் அழகிய முறையில்,நடைமுறைபடுத்தி வருகிறது.ஆபாசம் இல்லாத திரைப்படங்கள் என்றால் அது இரானிய திரைபடங்கள் தான்.இதைதான் தவறான போக்கு என்கிறதோ அமெரிக்கா?
No comments:
Post a Comment