Saturday 2 July 2011

பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்

பிரிட்டனில் பாலியல் நோக்கங்களுக்காக வயது குறைந்த சிறுமியரை தெருக்களில் அலைய விடும் நபர்களுள் நான்கில் ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை மதிப்பீடு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.


கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களில் அடிக்கடி ஈடுபட்டவர்கள் என்று 2379 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களுள் 28 வீதமானவர்கள் ஆசியநாட்டவர்கள்.

பிரிட்டனின் ஜனத்தொகையில் தற்போது ஆறு வீதமாகவும் இவர்கள் உள்ளனர். இந்தக் காரியங்களில் பெண்களை ஈடுபட வைப்பவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாண்டு முற்பகுதியில் டேர்பிகெங் என்ற ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் மற்றும் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை சிறையில் அடைத்த பின் இவர்கள் பற்றி நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விவரங்கள் தெரியவந்துள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த சில இளைஞர்களே பிரிட்டனைச் சேர்ந்த வெள்ளைத் தோல் உள்ள யுவதிகளை இலகுவாக பாலியல் நடத்தைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ஜெக் ஸ்ட்ரோவ் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார்.

திட்டமிட்ட அடிப்படையில் இளம் பெண்களை பாலியல் நடத்தைகளில் ஈடுபடுத்தி வரும் குழு குறித்து தொடர்ந்து போலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். டேர்பி பிரதேசத்தில் இந்தக் காரியத்தில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 1217 குற்றவாளிகளில் 346 பேர் ஆசிய நாட்டவர்கள், 367 பேர் வெள்ளையர்கள், 38 பேர் கறுப்பர்கள், இருவர் சீனர்கள் மற்றவர்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஆசிய நாட்டவருள் பெரும்பாலானவர்கள் 18-24 வயதான இளைஞர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களுள் 61 வீதமானவர்கள் வெள்ளைக்காரப் பெண்கள். இவர்களுள் அநேகமானவர்கள் 14-15 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்தப் பெண்களைக் காதலித்தே இவர்கள் தமது வலையில் சிக்கவைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment