Saturday 2 July 2011

அரசு கேபிள் டீவி, ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பிற்காக கீழ் உள்துறைக்கு மாற்றம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு கேபிள் டீவியை, தனது கட்டுப்பாட்டில் உள்துறைக்கு மாற்றியுள்ளார்.




இதையடுத்து நாட்டு உடமை ஆக்கப்படும் கேபிள் டீவி, தேர்தல் வாக்குறுதியின் படி அடுத்த மூன்று மாத காலத்திற்குள் சிறப்பாக செயற்பட ஆரம்பிக்கும் என அரசு தகவல்கள் உறுதி கூறியுள்ளன.
அரசு கேபிள் டீவியை மீள செயற்படுத்துவது குறித்து நேற்று தலைமை செயலகத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.
இதன் போது கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் கீழ் சுமார் 1500 க்கு மேற்பட்ட கேபிள் ஆப்பரேட்டர்கள் உள்ளனர் எனவும், தலா ரூ.100கோடி செலவில் அமைக்கப்பட்ட இக்கேபிள் டீவி நிறுவனங்களுக்கான கட்டுப்பாட்டு அறைகள் யாவும் தற்போது இயங்காது உள்ளது எனவும், தெரிவிக்கப்பட்டது.

இவற்றை மீள் இயக்க ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ.100 கோடி வீதம், செலவாகும் எனவும் இது குறித்து அறிவிப்பு நிதி நிலை அறிக்கையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment