Saturday 2 July 2011

6 பழங்குடி மக்கள் படுகொலை : மத்திய ரிசர்வ் படையினரின் சீருடையில் மாவோஜிஸ்டுக்கள் தாக்குதல்?

பீகார் தலைநகர் பாட்னாவுக்கு அருகில் உள்ள மங்கர் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் 6 பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


இப்படுகொலைகளுக்கு மாஜோஸ்டுக்களே காரணம் என காவற்துறை குற்றம் சுமத்தியுள்ளது. மத்திய ரிசர்வ் படையினர் போல சீருடை அணிந்து இரண்டு வாகனங்களில் வந்த மாவோஜிஸ்டுக்கள் கோர்ஹா என்ற பழங்குடி வகுப்பை சேர்ந்த 6 பேரை சுட்டனர் எனவும்,
இதில் ஐந்து பேர் தளத்திலேயே கொல்லப்பட்டும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார் எனவும் மேலும் 8 பேரை கடத்தி சென்றுள்ளதாகவும் காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பழங்குடி மக்கள் மாவோஜிஸ்டுக்களுக்கு எதிராக காட்டிக்கொடுக்கும் வேலைகளில் இறங்கியதால் கோபம் கொண்டு பழிவாங்கப்படுகிறார்கள் எனவும் மாவோஜிஸ்டுக்களின் சிவப்பு புரட்சி குழுவினரே இத்தாக்குதலை மேற்கொண்டிருப்பதாகவும் காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்தில் மாத்திரம் மாவோஜிஸ்டுக்களால் 1,174 பேர் (காவற்துரை, பொதுமக்கள்) கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும் உள்நாட்டிற்கு மிகவும் அச்சுறுத்தலான சவாலாக மாவோஜிஸ்டுக்கள் திகழ்வதாக பிரதமர் மன்மோகன் சிங்கும் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment