Saturday, 2 July 2011

பிகார் மாநிலத்தில்முஸ்லிம்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு ராகுல் ஆறுதல்

 பிகார் மாநிலம் அரரியா மாவட்டத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி

 
 போர்ப்ஸ்கஞ்ச், ஜூலை1: பிகார் மாநிலம் அரரியா மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

அரரியா மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி போர்ப்ஸ்கஞ்ச் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸôர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினர். அவர்களுக்கு நீதி கிடைக்க உதவுவதாவும்,தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான முகமது ரஷிது அன்சாரியின் தாயார் புலியா கட்டூனை சந்தித்து ஆறுதல் கூறினார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டார். ராகுல் காந்தியுடன், பிகார் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செüத்ரி மெகபூப் அலி கைஸர் உள்ளிட்டோரும் சென்றனர்.

ராகுல் காந்தியின் இந்த நடவடிக்கைக்கு மாநில துணை முதல்வர் சுசில் குமார் மோடி கண்டனம் தெரிவித்தார். ராகுல் காந்தி போர்ப்ஸ் கஞ்ச்க்கு சென்று பார்வையிடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர் இது போன்று காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட பாகல்பூருக்கும் ராகுல் செல்ல வேண்டும், என்று மோடி வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment