Saturday, 2 July 2011

புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ரங்கசாமியின் பரிந்துரை அடிப்படையில் அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் இக்பால்சிங் இலாகாக்களை ஒதுக்கி வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

அதன் விவரம்: முதல்வர் என். ரங்கசாமி: அமைச்சரவை, பொது நிர்வாகம், உள்துறை, வருவாய் மற்றும் கலால்துறை, பொதுப்பணித் துறை, திட்டம் மற்றும் நிதித்துறை, மின்சாரம், கூட்டுறவு, சுகாதாரம், நகர திட்டமிடல், குடிமைப் பொருள் வழங்கல், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல், மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்துத் துறைகளும்.

பி.எம்.எல். கல்யாணசுந்தரம் போக்குவரத்துத் துறை: அவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்: போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், கல்லூரிக் கல்வி, பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலம், கலை பண்பாட்டுத் துறை, அரசு வாகன பணிமனை.

எம்.சந்திரகாசு வேளாண்துறை: அவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் விவரம்: வேளாண்துறை, கால்நடைப் பராமரிப்பு, தொழில் மற்றும் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல், எழுதுபொருள் அச்சுத்துறை, துறைமுகம்.

பி. ராஜவேலு நலத்துறை: அவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் விவரம்: சமுகநலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், பிற்பட்டோர் நலத்துறை, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுலா.

என்.ஜி. பன்னீர்செல்வம் உள்ளாட்சித்துறை: அவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் விவரம்: உள்ளாட்சித் துறை, சமூக மேம்பாடு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நகர அடிப்படை சேவைகள், மீன்வளத்துறை, வீட்டு வசதி, தீயணைப்புத் துறை.

No comments:

Post a Comment