Friday, 1 July 2011

ரஹ்மத் நகரில் சுகாதார சீர் கேடு !

முத்துப்பேட்டை ரஹ்மத் நகர் தெருவில் கடந்த ஒரு வருட காலமாக கழிவு நீர் உடைத்து கொண்டு ஓடுகிறது இதை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்யும் போது மட்டும் பார்த்து விட்டு செல்வார்கள் அதற்க்கான மாற்றுவழியை என்ன என்பதை ஆராய்ந்தது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். எத்தனையோ முறை  நிர்வாகத்திடம் முறையிட்டும் சரியான நடவடிக்கைஎடுக்கவில்லை.



இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் குப்பை கூழங்கள். ரஹ்மத் நகரில்உள்ள சுமார் 200 வீட்டுகளின் குப்பைகளை பொது மக்கள் ஒரே இடத்தில் தான்கொட்டுகிறார்கள் ஆனால் அதை சுத்தம் செய்ய 2 வாரத்திற்கு ஒரு முறை தான்வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் குப்பைகள் நிறைந்து தெருவில் நடக்கமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது . 2 வாரத்திற்கு ஒரு முறை சுத்தம்செய்பவர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை வந்தால் சுத்தமாகவும் சுகாதாரமாகவும்இருக்கும். ஆனால் முத்துப்பேட்டை ரஹ்மத் நகரின் சுகாதாரத்தை சீர்கெடுக்கும் விதமாக பேரூராட்சி நிர்வாகம் நடந்துகொள்கிறது.
நன்றி : Muthupet force (இ. முஹம்மது ) 

No comments:

Post a Comment