Friday, 1 July 2011

இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கும் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

மாஸ்கோ :  உலகின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இத்தகவலை ரஷ்ய கடற்படைத் தளபதி விளாடிமிர் வைசோட்ஸ்கி கூறியுள்ளார். எனினும், "நெர்பா" என்னும் அந்த நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவுக்கு எப்போது வழங்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய கடற்படைத் தளபதி, "இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயமாக அந்த நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவுக்கு வழங்குவோம். அதை இயக்குவதற்கு ஏற்கெனவே இந்திய கடற்படை வீரர்கள் குழு ஒன்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது." என்றார்.

"நெர்பா" நீர்மூழ்கிக் கப்பலில் ஒரே நேரத்தில் 73 வீரர்கள் பயணம் செய்ய முடியும். அதிநவீன ஏவுகணைகளை கொண்ட "நெர்பா" தொடர்ந்து 100 நாட்களுக்கு தண்ணீருக்குள்ளேயே தங்கியிருக்கும் திறன் கொண்டது.

இதனிடையே, "அட்மிரல் கோர்ஸ்கோவ்" என்னும் விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட தளவாடங்களை வழங்குவதில் ரஷ்யா தொடர்ந்து தாமதம் செய்து வருவதால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. அந்த போர் கப்பலுக்கு ரஷ்யா கூடுதல் தொகை கேட்டு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. கடைசி நிலவரப்படி "அட்மிரல் கோர்ஸ்கோவ்" கப்பலுக்கு 230 கோடி ரூபாய் ரஷ்யா கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment