Friday 1 July 2011

அணு உலைகளை மூடும் திட்டம்: பாராளுமன்றத்தில் ஒப்புதல்

ஜெர்மனியில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டிற்குள் 8 முக்கிய அணு உலைகளை நிரந்தரமாக மூடிவிடுதற்கான ஒப்புதல் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் புகுஷிமா, டெய்சி ஆகிய அணு உலைகள் வெடித்து சிதறின. இதனால் கதிர்வீச்சு தாக்குதல் ஏற்பட்டது.


இதன் ‌எதிரொலியாக கடந்த மே மாதம் 30ம் தேதியன்று ஜெர்மனி தங்களது நாட்டில் உள்ள 8 முக்கிய அணு உலைகளை வரும் 2022ஆம் ஆண்டிற்குள் நிரந்தரமாக மூடிவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

இதன்படி நேற்று பாராளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் கீழ்சபையில் இதற்கான ‌வரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு 513 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். 79 பேர் எதிராக வாக்களித்தனர். 9 பேர் விலகினர்.

உலகின் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி அடைந்த நாடான ஜெர்மனி தனது மின்சக்தி தேவையினை 23 சதவீதம் அணு உலைகளே பூர்த்தி செய்கின்றன.

தற்போது ஜெர்மனியின் இந்த முடிவால் மாற்று எரிசக்தி மூலம் தேவையினை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல் கூறுகையில்,"இனி ஜெர்மனியின் மின்தேவையினை புதுப்பிக்கவல்ல எரிசக்தி மூலம் பெறப்படும்" என்றார்.

No comments:

Post a Comment