Friday, 1 July 2011

லிபியா மீது பிரான்ஸ் ஆயுதங்கள் வீச்சு: ஆப்பிரிக்க ஒன்றியம் கடும் கண்டனம்

லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் குழுக்கள் பகுதியில் பிரான்ஸ் ஆயுதங்கள் வான் வழியே வீசப்பட்டு உள்ளன.
இதனால் அந்தப் பிராந்தியம் முழுவதும் அபாய நிலைக்கு ஆளாகி உள்ளது. பிரான்சின் இந்த நடவடிக்கைக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.


லிபிய தலைநகர் திரிபோலிக்கு தென்மேற்கே பழங்குடியின பேராளிகள் பிராந்தியம் உள்ளது. இங்கு தங்களது ஆயுதங்கள் வீசப்பட்டதை பிரான்சும் ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து ஆப்பிரிக்க ஒன்றிய கொமிஷன் தலைவர் ஜுன் பிங் கூறுகையில்,"பிரான்ஸ் நடவடிக்கையால் போரில் உருக்குலைந்த சோமாலியா பிரச்சனை லிபியாவில் உள்ளது" என்றார்.

ஈக்வடோரியல் கினியா பகுதியில் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் லிபிய விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.

லிபியாவில் உள்நாட்டு போர் அபாயம், நாடு துண்டாடப்படும் நிலை, சோமாலியா போன்ற அவலநிலை, நாடு முழுவதும் ஆயுதங்கள், தீவிரவாத அபாயம் போன்றவை ஏற்படும் சூழல் உள்ளது என ஜுன் பிங் எச்சரித்தார். இந்த அபாய நிலை அருகாமையில் உள்ள நாடுகளுக்கும் ஏற்படலாம் என அவர் தெரிவித்தார்.

லிபியாவுக்கான ஆப்பிரிக்க ஒன்றிய அமைதித் திட்டம் மார்ச் மாதம் துவங்கப்பட்டது. அது இன்னும் செயல்பாட்டில் உள்ளது. அரசியல் பேச்சுவார்த்தை மேற்கொள்ள போர் நிறுத்தம் தேவை என்றும் அவர் கூறினார்

No comments:

Post a Comment