Saturday 22 June 2013

பாப்புலர் ஃபிரண்ட் மீது அவதூறு செய்தி வெளியிட்ட 10 நாளிதழ்களுக்கு பிரஸ் கவுன்சில் நோட்டீஸ்!

புது டெல்லி : பாப்புலர் ஃ பிரண்ட் ஆப் இந்தியா குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட பத்து நாளிதழ்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொருட்டு வரும் ஜுலை 16 ந்தேதி அன்று விசாரணை குழு முன் ஆஜராகும் படி பிரஸ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Friday 21 June 2013

தூக்கு தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்! இந்திய அரசே வலியுறுத்து! முத்துப்பேட்டையில் நாளை கடையடைப்பு மற்றும் ஆர்பாட்டம்!

கும்பகோணம், முத்துப்பேட்டையை சேர்ந்த 2 வாலிபர்களின் தூக்கு தண்டனையை குவைத் அரசு நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி முத்துப்பேட்டையில் நாளை கடையடைப்பு போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

SDPI கட்சியின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா: முத்துப்பேட்டையில் 5 இடத்தில் கொடியேற்றம்!

SDPI கட்சி 2009 ஜூன் 21 ஆம் தேதி துவங்கப்பட்டது. இன்றுடன் 4 வருடம் நிறைவு பெறுகிறது. ஜூன் 21 ஆம் தேதி 5 ஆம் ஆண்டில் கட்சி அடியெடுத்து வைக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதியை “கட்சி துவக்க தினமாக”- கட்சி கொண்டாடி வருகிறது.

Tuesday 18 June 2013

முத்துப்பேட்டையில் UAPA சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ தெருமுனை பிரச்சாரம்!

யுஏபிஏ சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் இன்று (18.06.2013) முத்துப்பேட்டையில்  நான்கு இடத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. யுஏபிஏ (UAPA) என்று அழைக்கப்படுகிற கருப்புச்சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறது. 

Monday 17 June 2013

பாப்புலர் ஃபிரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் கலந்துகொண்ட மலேசியாவில் நடைபெற்ற "இஸ்லாத்திற்கு எதிரான சதியும்! முஸ்லிம்களின் நிலையும்! கருத்தரங்கம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (16/06/13) "இஸ்லாத்திற்கு எதிரான சதியும் முஸ்லிம்களின் நிலையும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பாப்புலர் ஃபிரண்டின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Saturday 8 June 2013

இலக்கியச் சோலை பதிப்பகத்தின் சார்பாக புத்தக வெளியீடு!

பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தளங்களின் சர்வர்களை உளவு பார்க்கும் அமெரிக்கா!

கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பல முன்னணி வலைத்தளங்களின் சர்வர்களில் நுழைந்து அமெரிக்கா உளவு பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிநபர்களைக் குறிவைத்து மைக்ரோசாஃப்ட்டின் ஹாட்மெயில், யாஹு, கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள், யூடியூப், அமெரிக்கன் ஆன்லைன், ஸ்கைப் உள்ளிட்ட 9 முன்னணி நிறுவனங்களின் சர்வர்களில் நுழைந்து, அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. உளவு பார்ப்பதாக அமெரிக்காவின் 'தி வாஷிங்டன் போஸ்ட்' மற்றும் பிரிட்டனின் 'தி கார்டியன்' பத்திரிகையும் செய்தி வெளியிட்டன.

சீனாவில் பரிதாபம்!- பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 38 பயணிகள் உடல் கருகி பலி! (வீடியோ இணைப்பு)

சீனாவின் பியூஜியான் மாகாணத்தின் ஜியாமென் நகரில் நேற்று  மாலை ஏராளமான பயணிகளுடன் சென்ற அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஜின்ஷான் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சென்ற போது இத் தீ விபத்து ஏற்பட்டது.

விரைவில் வெடிக்க இருக்கும் மோடி ‘பலூன்’ : சரத்பவார்!

இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல்வாதியாக மாற்ற முயற்சிக்கப்பட்டு தோல்வியை தழுவிய மோடியை, அளவுக்கு அதிகமாக ஊதப்பட்ட பலூனுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்வார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “எனது 40-50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், அளவுக்கு அதிகமாக ஊதப்பட்ட பல பலூன்கள் விரைவில் வெடித்ததை பார்த்திருக்கிறேன்” என்றார். 

அத்வானி கோஷ்டியினரை அடித்து சென்ற மோடி கோஷ்டி! - ஷகீல் அகமது!

கோவா தலைநகர் பனாஜியில்இன்று (சனிக்கிழமை) தொடங்குகிற பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் உடல் நலக்குறைவால் அத்வானி கலந்துகொள்வாரா என்பது உறுதியாகவில்லை. மூத்த தலைவர்கள் உமாபாரதி, ஜஸ்வந்த்சிங், ரவிசங்கர்பிரசாத், சத்ருகன் சின்கா, வருண்காந்தி உள்ளிட்டவர்கள் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது. 

Friday 7 June 2013

மாலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது! – மத்திய உள்துறை இணை அமைச்சர்!

புதுடெல்லி: 2006-ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையும், சி.பி.ஐயும் குற்றவாளிகளாக சேர்த்து கைதுச் செய்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறியுள்ளார். இத்தகைய தவறுகள் இனி  நடக்காது என்றும், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைத்தது சரியான நடவடிக்கை என்றும் சிங் மேலும் தெரிவித்துள்ளார். 

மன்னர் திப்பு சுல்தானுக்கு மணி மண்டபம்!: கண்டன சுவரொட்டி ஒட்டிய பயங்கரவாதி கைது!

திண்டுக்கல்: ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்னர்களுள் மைசூர் புலி ஹைதர் அலீயும் அவர் மகன் திப்பு சுல்தானும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இரு மன்னர்களுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப் போவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் அதற்கான இடங்களை அடையாளங் காணும் பணி தொடங்கி சுமார் 10 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

யு.ஏ.பி.ஏ (UAPA) சட்டத்திற்கு எதிராக தொடர் பிரச்சார இயக்கம்!-எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு தீர்மானம்!

எஸ்.டி.பி.ஐ(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் மாநில செயற்குழு நேற்று  (06.06.2013) மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.  மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.ரபீக் அஹமது வரவேற்றார், மாநில பொதுச் செயலாளர்கள் நெல்லை முபாரக். நிஜாம் முகைதீன், பி. அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Thursday 6 June 2013

கிரிக்கெட் வீரர்கள் மீது மோக்கா சட்டம்: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி கைதுச் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 22 பேர் மீது மோக்கா(மஹராஷ்ட்ரா அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கடுமையான பிரிவுகளை பிரயோகித்தது கண்டனத்திற்குரியது. மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை கிளப்பிய பொடா, தடா, யு.ஏ.பி.ஏ போலவே மோக்கா(MCOCA) சட்டமும் ஜனநாயக விரோதமானதாகும். 

முஸ்லிம் மையங்களை தாக்குவதற்கு மஹராஷ்ட்ரா, மத்திய பிரதேச ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இடையே நெருங்கிய தொடர்பு -என்.ஐ.ஏ!

முஸ்லிம் மையங்களை தாக்குவதற்கு மஹராஷ்ட்ராவிலும், மத்திய பிரதேசத்திலும் உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளது.

முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்திய போலீஸ்! – வழக்கை வாபஸ் பெற உ. பி அரசு முடிவு!

புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் குண்டுவைத்ததாக போலீஸ் அநியாயமாக குற்றம் சாட்டிய ஷமீம் அஹ்மத் என்ற முஸ்லிம் இளைஞர் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கை வாபஸ் பெற உ.பி அரசு முடிவுச் செய்துள்ளது. 2006-ஆம் ஆண்டு கொடோலியாவில் ஜமுனா ஃபதகில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் ப்ரஷர் குக்கர் குண்டை ஷமீம் தான் வைத்தார் என்ற போலீஸின் கூற்றை உ.பி அரசு நிராகரித்துள்ளது.2006 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி ஸங்கட் மோச்சன் மற்றும் வாரணாசி காண்ட் ஸ்டேஷன் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. 21 பேர் கொல்லப்பட்ட இச்சம்பவங்களைத் தொடர்ந்து நடத்திய சோதனையில்