Monday, 11 July 2011

‘பெல்’ நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

ராணிப்பேட்டை ‘பெல்’ நிறுவனத்தில், உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) ராணிப்பேட்டை தொழிலகத்தில் ஐடிஐ, தொழிற்கல்வி(வொகேஷனல்) பட்டயப் படிப்பு (டிப்ளமோ இன்ஜினியரிங்) மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு (பி.இ., பி.டெக்.,) கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து கணினி வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இறைத்தூதர்கள் ஏன்?

ஓரிறையின் நற்பெயரால்...

ஒருவன் கடவுளை மறுப்பதாலோ, ஏற்பதாலோ கடவுளுக்கு எந்த ஒரு நன்மையும்,தீமையும் விளைவதில்லை. மாறாக நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கு ஏற்றவாறு நமக்கே பயன்களும்,தீமைகளும் வந்தடைகின்றன. அதை யாராக இருந்தாலும் கண்கூடாக நடைமுறையில் காண்கிறோம்.ஆக கடவுள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

கூட்டுக் களவாணிகள்

கறுப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் தனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது என்று அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களிடம் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், ஆளாளுக்கு ஒவ்வொரு தொகையைச் சொல்கிறார்கள், இந்தத் தொகை அவர்களுக்கு எந்தக் கணக்கீடு மூலம் கிடைத்ததோ என்கிற வியப்பையும் தெரிவித்தார். 

நவீன உலகின் பலம்மிக்க சக்தி இஸ்லாமே


அஸ்ஸலாமு அழைக்கும் சகோதர சகோதரிகளே!!!

அகிலங்களை படைத்தவனுக்கே எல்லாப்புகளும் ....

110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

வயிற்று நோயும், தேனின் பயனும்

சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....


வைட்டமின் என்றால் என்ன?

மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.

பாகிஸ்தானுக்கு 80 கோடி டாலர் நிதியுதவி: அமெரிக்கா நிறுத்தியது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான அமெரிக்க ராணுவ உதவிகள் நிறுத்தபப்ட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகி்ஸ்தான், இதனால் நாங்கள் கவலைப்படப் போவதில்லை என்று கூறியுள்ளது.

ஏனைய செய்தி ரஷ்யாவின் வோல்கா ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்தது: 100 பயணிகள் பலி

ரஷ்யாவின் வோல்கா ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்தது. அந்த படகில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்தனர். அவர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவின் உலக புகழ்பெற்ற வோல்கா ஏரியில் இரட்டை அடுக்கு கொண்ட சுற்றுலா படகு நேற்று கவிழ்ந்தது. அந்த படகில் மொத்தம் 180 பயணிகள் இருந்தனர். கடுமையான புயல் காற்று வீசியதில் அந்த படகு தண்ணீரில் தடுமாறி கவிழ்ந்தது.

தமிழக திட்டக்கமிசன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு மாநில திட்டக்கமிசன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாநில திட்டக்கமிசன் செயல்படுகிறது.

வருடந்தோறும் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பட்ஜெட்டுக்கு முன்பு இந்த குழு முடிவு செய்யும். இதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

உலக வரைபடத்தில் 193 ஆவது நாடாக மலர்ந்தது தென் சூடான்

தென் சூடான் உலகின் புதிய நாடாக நேற்று சனிக்கிழமை மலர்ந்துள்ளது. கார்ட்டோம் நிர்வாகத்தின் கீழிலிருந்த தென் சூடான் 20 இலட்சம் உயிர்களை காவுகொண்ட கொடூர குற்றம் தசாப்தங்களாக தொடர்ந்த நிலையில் இப்போது புதிய தேசமாக உலக வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறது.

கொங்கோவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் வட கிழக்குப் பகுதியில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.112 பேருடன் பயணித்த இவ் விமானம் கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிசாங்கனி விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது கடந்த வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.


முஸ்லிம் பெண்கள் நிகாபை கழற்றாவிட்டால் ஓர் ஆண்டு சிறை-ஆஸ்திரேலியாவில் சட்டம்

சிட்னி:முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை பேணும் அடிப்படையில் நிகாப் என்ற முகத்தை மறைக்கும் ஆடையை அணிவதை தடை செய்ய ஆஸ்திரேலியா சட்டம் கொண்டுவருகிறது.

லஞ்சமா? உடனே 9840983832 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்!

சென்னை, ஜூலை .10-லஞ்சம் வாங்கும் போலீசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், 9840983832 என்ற செல்போன் எண்ணில் பேசி தகவல் தெரிவிக்கும் திட்டம் சென்னை போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் டி.ஜி.பி.க்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

கல்கா மெயில் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு

பதேபூர் :  கல்கா மெயில் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் கான்பூர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலர் இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது.

பாப்புலர் ஃப்ரண்டின் புதிய மாநில தலமையகம் திறப்பு விழா

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலமையகம் இதனால் வரை சென்னை இராயப்பேட்டையில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள மாடர்ன் டவர்ஸ் என்னும் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது அலுவலகம் மாற்றப்பட்டு மண்ணடியில் லிங்கி செட்டித் தெருவில் மஸ்ஜிதே மாமூர் பள்ளியின் பின்புறம் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

நெல்லையில் வெடிபொருட்கள் பறிமுதல்! ஹிந்துத்துவா சதியா?

அச்சன்புதூர்: தென்காசி அருகேயுள்ள அச்சன் புதூரில் காசிதர்மம் குளத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவ்வழியே சென்ற வாலிபரிடம் நடத்திய சோதனையில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தனி நாடாக உருவெடுக்க ஐக்கிய நாடுகள் சபையை நாடுகிறது பாலஸ்தீனம்

ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு அங்கீகாரம் பெற பாலஸ்தீனம் முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கையை கனடா கடுமையாக எதிர்க்கிறது.

பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்தை பெறுவதில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் விருப்பம் இல்லை. பாலஸ்தீன நிர்வாகம் மேற்கு கரையின் பெரும்பாலான பகுதியை நிர்வகித்து வருகிறது. அந்த நிர்வாகம் தனி நாடு கோரிக்கை தொடர்பாக கடந்த மாதம் பிரசாரத்தை துவக்கி உள்ளது.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 950 வகை நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதிமுக அரசு பதவிக்கு வந்தவுடன், கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் விரிவுபடுத்தப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுக்கு 200 பீரங்கிகள் சப்ளை: ஜெர்மனி அரசு உறுதி

மத்திய கிழக்கு பகுதியில் ஜனநாயக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த போராட்டம் நடைபெறும் தருணத்தில் சவுதி அரேபியாவுக்கு லியோ பார்டு பீரங்கிகளை ஜெர்மனி அரசு அனுமதித்து உள்ளது.

பா.ஜ ஆட்சியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றியும் சி.பி.ஐ. விசாரணை? Connect with

டெல்லி: பாரதீய ஜனதா ஆட்சியின்போது வழங்கப்பட்ட 2 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்கள் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தையும் முழுமையாக விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.