Monday, 11 July 2011

தமிழக திட்டக்கமிசன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு மாநில திட்டக்கமிசன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாநில திட்டக்கமிசன் செயல்படுகிறது.

வருடந்தோறும் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பட்ஜெட்டுக்கு முன்பு இந்த குழு முடிவு செய்யும். இதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.


12-வது ஐந்தாண்டு திட்டத்தை நிறைவேற்றுவது பற்றியும் பல்வேறு குழுக்களிடமும் இது ஆய்வு செய்யும். இவற்றை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு மாநில திட்டக் கமிசனை மாற்றி அமைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மாநில திட்டக் கமிசன் துணைத்தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தாசீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக, 1. சென்னை புற்றுநோய் மைய தலைவர் வி.சாந்தா, 2. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் கே.ஸ்ரீதர் (சுகாதாரம்), 3. கோவை கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி (விவசாயம்- பாசனம்), 4. தொழில் அதிபர் ஏ.சி.முத்தையா (தொழில்துறை), 5. முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி (கல்வி) ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக கவர்னர் பர்னாலா பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment