Monday 18 July 2011

மும்பை வெடிப்புகள்: 'இந்து அமைப்புகள் உட்பட அனைத்து பயங்கரவாத குழுக்கள் தொடர்பாகவும் விசாரணை வேண்டும்'

  மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக இந்து அமைப்புகள் உட்பட அனைத்து பயங்கரவாத குழுக்களின் பாத்திரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
இந்து அமைப்பான ராஷ்டிரிய சுயம் சேவாவை (ஆர்.எஸ்.எஸ்.) அவர் 'குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள்' என விமர்சித்துள்ளார்.

ரூ.250 கோடி வரி செலுத்திய இந்திய கிரிக்கெட் சபை


இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.250 கோடி வரி செலுத்தியுள்ளதாக அதன் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மெல்லக் கொல்லும் ரத்த அழுத்த நோய்

பி.பி.(Blood pressure- BP) என்ற வார்த்தையைக் கேட்டாலே நமக்கெல்லாம் பி.பி. ஏறுகிறது. அந்த அளவுக்கு நம்மை அச்சுறுத்துகிற பிரச்சனையாக உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதினர்கூட இந்தப் பிரச்சனையால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்த மிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 

எஸ்.டி.பி.ஐ உத்தரபிரதேச மாநில தலைவராக வழக்கறிஞர் ஷரஃபுதீன் தேர்வு

கான்பூர்:சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் உ.பி மாநில தலைவராக வழக்கறிஞர் ஷரஃபுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கான்பூர் மர்ச்சண்ட் கிளப்பில் நடந்த தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.குர்ஷித் ஜாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பயஸ் உஸ்மானியை போலீஸ் அடித்தே கொன்றது!

மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் பயஸ் உஸ்மானி. இவரை போலீஸ்சார் அடித்தே கொன்றார்கள். விசாரணை என்றபெயரில் அழைத்து செல்லப்பட்டவரை போலீஸ் அடித்தே கொன்றுள்ளது என்று உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இஸ்ரேலில் சுனாமியின் எச்சரிக்கை

“நாம் தென் ஆஃப்ரிக்கா போல மாறப்போகின்றோம்; பொருளாதாரத் தடை கல்லை ஒவ்வொரு இஸ்ரேலிய குடும்பமும் உணரப்போகிறது” என்றார் மிகப்பெரும் வியாபாரப் புள்ளியான இடாம் ஒஃபர். கடந்த மே மாதம் மிகவும் இரகசியமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் வர்த்தக பெரும்புள்ளிகள் பலர் கலந்துகொண்டனர்.

1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு அனுமதி : உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

சென்னை: தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடப்பாண்டிலும் தொடர வேண்டும். வருகிற 22ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.