Tuesday, 5 July 2011

நியமன உறுப்பினர் சிந்தியா பிரான்சிஸ்: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை, ஜூலை 4: தமிழக சட்டப் பேரவையின் நியமன உறுப்பினராக ஆங்கிலோ-இந்தியரான நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் (56) நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான அறிவிப்பை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டுள்ளார்.  மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மயக்கவியல் துறை நிபுணராக சிந்தியா உள்ளார். 

நில மோசடி: எடியூரப்பாவிற்கு மீண்டும் சிக்கல்

பெங்களுரூ: சிக்மகளூர் மற்றும் மைசூர் மாவட்டங்களில் நில மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது புகார் எழுந்ததை தொடர்ந்து மீண்டும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


மெ‌ட்‌ரி‌க் ப‌ள்‌ளிக‌ள் அ‌ங்‌கீகார‌ம் ர‌‌த்து- த‌மிழக அரசு‌க்கு உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது

1974ஆ‌மஆ‌ண்டு‌க்கு ‌பிறகஆர‌ம்‌பி‌க்க‌ப்ப‌ட்மெ‌ட்‌ரி‌க்குலேச‌னப‌‌‌ள்‌ளிக‌ளி‌ன் ‌‌அ‌ங்‌கீகார‌த்தர‌த்தசெ‌ய்ய‌க்கோ‌ரி தா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்வழ‌க்‌கி‌ல் 4 வார‌த்‌தி‌லப‌தி‌லஅ‌ளி‌க்குமாறத‌‌மிழஅரசு‌க்கதா‌க்‌கீதஅனு‌ப்செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

கே.எ‌ன்.நேரு ‌மீது நில‌ம் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு புகா‌ர்

நில‌‌த்தஆ‌க்‌கிர‌‌மி‌ப்பசெ‌ய்து‌வி‌ட்டத‌ன்னை ‌மிர‌ட்டுவதாமுன்னாள் ‌ி.ு.க. அமைச்ச‌ே.என்.நேரு, அவரதசகோதர‌ரஉ‌ள்பட 3 பே‌ர் ‌மீதகாவ‌ல்துறை‌யி‌ல் புகா‌ர் ‌அ‌ளி‌க்க‌ப்ப‌ட்‌டு‌ள்ளது.
திருச்சி மாநககாவ‌ல்துறஆணைய‌ரமாசானமுத்துவிடமதிருச்சி சிந்தாமணி ி.என். நகரைசசேர்ந்சுரேஷ்குமாரஎ‌ன்பவ‌ரபுகா‌ரமனஒ‌ன்றகொடு‌‌த்து‌ள்ளா‌ர்.

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள் இந்திய உளவுப் பிரிவுகள் விசாரணை

தமிழக மீனவர்களை பிடித்து செல்லும் இலங்கை கடற்படையினருடன் சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து இந்திய உளவுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 23 மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைப்படி மத்திய அரசு தலையிட்டதால் விடுவிக்கப்பட்டனர். திங்கட்கிழமை 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர். தமிழக மீனவர்களை பிடிக்க வரும் இலங்கை கடற்படை கப்பலில், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பத்பநாபசுவாமி கோவிலில் கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் கோடியை வைத்து என்ன செய்யலாம்?

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளில் இருந்து கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் உள்ளி்ட்டவற்றை வைத்து என்ன செய்வது என்று யோசனைகள் வர ஆரம்பித்துவிட்டன.

துனிஷிய மாஜி அதிபருக்கு மேலும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போதை மருந்து, ஆயுதம் கடத்தல் வழக்கில் துனிஷிய மாஜி அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

துனிஷியா நாட்டின் அதிபராக கடந்த 23 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் ஜினே பெல் அபிதின் பென் அலி. இவரது ஆட்சிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் மக்கள் கிளர்ச்சி செய்தனர்.

அரசுக்கு சொந்தமான புதையலை கொள்ளையடிக்க திட்டமா?

காஞ்சிபுரம் - திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.



சுவனத்தின் தறிவுகோல் தொழுகை அல்லவா!

உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். ஆம்! முஸ்லிம்களின் மிகமிக முக்கிய வணக்க வழிபாடுகளில், உன்னத ஐம்பெரும் கடமைகளில் ஒரு கடமையானது தொழுகை. நம்மை படைத்த இறைவனுக்காக தினந்தோறும் நிறைவேற்றும் (சொர்க்கத்தின் திறவுகோலான) இறைவணக்கமான தொழுகையை முறையாக குறிப்பிட்ட சமயத்தில் நிறைவேற்றுவது நமது கடமையாகும்.

திருக்குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களிலும் தொழுகை எனும் இறைவணக்கம் முஃமின்கள் மீது மிக வலியுறுத்தப்பட்ட கட்டாயக்கடமை என்பதை அறியமுடிகிறது. இதனை தவறாது நிலைநிறுத்துவதற்கு இறைவிசுவாசிகள் அனைவரும் கடமைபட்டுள்ளார்கள்.

செல்போன் உண்டாகும் பாதிப்புகளும், கலாச்சார சீரழிவுகளும்!

சென்னை: செல்போனில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.


அமைதி பேச்சு வார்த்தையை தடுக்கும் நேட்டோ படைகள்: லிபிய அரசு பகிரங்க குற்றச்சாட்டு

லிபியாவில் கடாபிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் நேட்டோ படைகளும் புகுந்து உள்ளன.
இந்த படைகள் லிபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக லிபியா அரசு குற்றம் சாட்டி உள்ளது.

தென் சென்னை மாவட்டம் SDPI சார்பில் மூன்றம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது

இதில் மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குதல், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்குதல், மேலும் மாணவர்களுக்கு காமராஜர் மற்றும் காயிதே மில்லத் கல்வி விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. 

மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்க்கான வழிகாட்டுதல் முகாம்

மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெறத் தேவையான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டுதல் முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இதில் பெருந்திரலான மாணவ, மனைவியர்  கலந்து பயனடைந்தனர்.

தெலுங்கானா விவகாரம் சூடு பிடிக்கின்றது

தெலுங்கானா பிரதேசத்தை ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளார்கள்.


பராக் ஒபாமா கொல்லப்பட்டதாக வெளியான செய்தியால் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் ட்விட்டர் செய்தி இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



அதிவேக புல்லட் ரயில் பயணத்தை கண்டித்து இத்தாலியில் கலவரம்

இத்தாலி-பிரான்ஸ் இடையே பாரீஸ் மற்றும் பிலன் நகரை இணைக்கும் வகையில் அதிவேக புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2001ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.



நெஞ்சாங்கூட்டில்…

கண்கள் இரண்டு. ஆனால், பார்வை ஒன்று.
செவிகள் இரண்டு. ஆனால், கேட்டல் ஒன்று.
நாசியில்கூட துளைகள் இரண்டு. ஆனால், சுவாசம் ஒன்று.

மனிதனுக்கு இதயம் ஒன்று. இரண்டு இதயங்கள் இல்லை. ஆனால், அந்த ஒற்றை இதயத்தில் பல்லாயிரம் சிந்தனைகள்.

போலி என்கவுண்டர்:கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம் வீதம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:டெல்லி கன்னாட்ப்ளேஸில் போலி என்கவுண்டரில் கொலைச்செய்யப்பட்ட இரண்டு தொழிலதிபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் வீதம் நஷ்ட ஈடு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கொலைச்செய்யப்பட்டவர்களின் மனைவிகளுக்கும், பிள்ளைகளுக்கும் சமமாக நஷ்ட ஈட்டுத்தொகை வழங்க நீதிபதி எஸ்.முரளீதரன் உத்தரவிட்டார்.

எகிப்தில் கொடூரம்: கியாஸ் பைப் லைன் தகர்ப்பு

எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார். ராணுவத்திடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. வரும் செப்டம்பரில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என ராணுவ அரசு கூறியுள்ளது.

நாட்டின் நிர்வாக பணிகளை சீர்திருத்தும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை எடுப்பதில் ராணுவ அரசு தீவிரம் காட்டவில்லை என எகிப்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெய்ரோ நகரில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் இன்னும் போராட்டம் நீடிக்கிறது.

இந்நிலையில் எகிப்தில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் நாடுகளுக்கு செல்லும் எரிபொருள் பைப் லைனை போராட்டக்காரர்கள் நேற்று குண்டு வைத்து தகர்த்தனர்.

சினாய் தீபகற்ப பகுதியில் உள்ள பிர் அல் அப்த் என்ற இடத்தில் கார் குண்டு மூலம் இந்த அசம்பாவிதம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பைப் லைன் தகர்க்கப்பட்டதால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக இஸ்ரேல், ஜோர்டன் நாடுகளுக்கு எரிபொருள் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம்! இன்று விடிவு ஏற்படுமா?

JULY 05, சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தின் பாடத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



லஞ்சம் கொடுக்க முடியாததால் நடுரோட்டில் பிரசவம்!

JULY 05, லக்னோ: லஞ்சம் கொடுக்க மறுத்த ஏழை கர்ப்பிணி பெண்ணை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், அந்த பெண், சாலையோர நடை பாதையிலேயே, குழந்தையை பெற்றெடுத்தார். இந்த பரிதாப சம்பவம், உ.பி.,யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.