Tuesday 5 July 2011

அமைதி பேச்சு வார்த்தையை தடுக்கும் நேட்டோ படைகள்: லிபிய அரசு பகிரங்க குற்றச்சாட்டு

லிபியாவில் கடாபிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் நேட்டோ படைகளும் புகுந்து உள்ளன.
இந்த படைகள் லிபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக லிபியா அரசு குற்றம் சாட்டி உள்ளது.


பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என இரு தரப்பினரும் கருதும் நிலையில் நேட்டோ படைகள் போராட்டக்காரர்கள் தலைவர்களுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்துகின்றன என்று லிபிய அரசு கூறி உள்ளது.

லிபியா வெளியுறவு துணை அமைச்சர் காலித் காலிம் கூறுகையில்,"திரிபோலியின் சில பகுதியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இருப்பினும் நேட்டோவின் குறுக்கீடு காரணமாக அவற்றில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது" என்றார்.

நேட்டோவில் உள்ள சில நபர்கள் லிபியா அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடைபெற விடாமல் தடுக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைதி பேச்சு வார்த்தை ஏதும் நடைபெறவில்லை என பெங்காசியை தலைமையிடமாக கொண்ட தேசிய மாற்ற கவுன்சில் கூறியது. அமைதி பேச்சு வார்த்தை கடந்த 2 மாதமாக நடைபெற்றது.

இதற்கு இத்தாலி மற்றும் நோர்வே உதவியதாக லிபியா தெரிவித்து இருந்தது. அமைதி பேச்சு வார்த்தைக்கு தாம் ஏதும் உதவவில்லை என்று லிபியாவின் கருத்துக்கு இத்தாலியும் எதிர்ப்பு தெரிவித்தது.

கடாபியின் மகன் செய்ப் அல்-இஸ்லம் கூறுகையில்,"தங்களை தாக்குவதே நேட்டோவின் இலக்காக உள்ளது" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment