Tuesday, 5 July 2011

நில மோசடி: எடியூரப்பாவிற்கு மீண்டும் சிக்கல்

பெங்களுரூ: சிக்மகளூர் மற்றும் மைசூர் மாவட்டங்களில் நில மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது புகார் எழுந்ததை தொடர்ந்து மீண்டும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


 கர்நாடக மாநிலத்தில் வனப்பகுதி நிலம், அரசு புறம்போக்கு நிலங்க‌ளில் ஆக்கிரமிப்புகளை தடுக்க ஒய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரி பாலசுப்ரமணியன் தலைமையில், அரசு நிலபாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குழு ஒன்றை கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது.

இக்குழு 20 மாதங்களாக ஆய்வு செய்து அளித்துள்ள 300 பக்க அறிக்கையில் அறிக்கையின் படி 12 லட்சம் ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சிக்மகளுரூ மாவட்டத்தில் அதிகபட்சமாக வனப்பகுதிக்கு சொந்தமான நிலம் உள்பட 35 ஆயிரம் ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதிலும் புலிகள் காப்பகத்தி்ற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளனர் என்ற தகவலையும் பாலசுப்ரமணியன் குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கடந்த 2009- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதியன்று முதல்வர் எடியூரப்பாவின் முதன்மை செயலர் ஐ.என்.எஸ். பிரசாத்திற்கு ,பாலசுப்ரமணியன் குழு எழுதிய கடிதத்தில், சிக்மகளுரூ மாவட்ட வனப்பகுதி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு முதலமைச்சர் அலுவலகமே பாதுகாப்பு தருகிறது. இதுதொடர்பாக மாவட்ட துணை கமிஷன் நவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலசுப்ரமணியன் அளித்து இந்த பிரச்னையால் முதல்வர் எடியூரப்பாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மற்றொரு புகார்: மைசூர் மாவட்டத்தில் வீட்டுமனைகளுக்கா நில ஒதுக்கீடு நடந்ததில் முதல்வர் எடியூரப்பாவின் தனது உறவினருக்கு அதிகம் ஒதுக்கீடு நடந்ததாக மற்றொரு புகார் கூறப்பட்டுள்ளது.

மைசூர் புறநகர் மேம்பாட்டு ஆணைய மூலம் , விஜயநகர் 3-வது லேஅவுட் பிரிவில் மொத்தம் 10 மனைகளை எடியூரப்பா தனது உறவினர்களுக்கு ஒதுக்கி, விதி முறைகளை மீறியுள்ளார் என மாஜி முதல்வர் குமாரசாமி கூறினார். இதற்கு எடியூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார்.

10மனைகளை ஒதுக்கவில்லை , 4 மனைகள் தான் உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டேன். அதுவும் கணவரை இழந்த எனது சகோதரிக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஒதுக்கினேன். இதற்கு மைசூர் மாவட்ட துணை கமிஷனர் அளித்துள்ள அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

No comments:

Post a Comment