Tuesday, 5 July 2011

அதிவேக புல்லட் ரயில் பயணத்தை கண்டித்து இத்தாலியில் கலவரம்

இத்தாலி-பிரான்ஸ் இடையே பாரீஸ் மற்றும் பிலன் நகரை இணைக்கும் வகையில் அதிவேக புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2001ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.



 இதற்கு இத்தாலியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருந்தும் அதையும் மீறி வடக்கு இத்தாலியில் துரின்பகுதியில் சியோமோன்ட் என்ற இடத்தில் சுரங்கபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

நேற்று அங்கு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் அங்கு திரண்டனர். பணி நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் பேரணி நடத்தினார்கள். அப்போது பேரணியில் திடீரென கலவரம் வெடித்தது.

உடனே அதில் பங்கேற்ற பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பொலிசார் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். நிலைமை மோசமடைந்ததால் கலவரக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். மேலும் தடியடி நடத்தினார்கள்.

இச்சம்பவத்தில் 200 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 188 பேர் பொலிசாரும் அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கலவரத்துக்கு முகமூடி அணிந்து பேரணியில் கலந்து கொண்ட தீவிரவாதிகள் காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இத்தாலி மற்றும் அண்டை நாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கலவரத்துக்கு இத்தாலி அதிபர் ஜியோர்ஜியோ நபோலி டானோவும், பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment