தெலுங்கானா பிரதேசத்தை ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ்
உள்ளிட்ட பல கட்சிகளின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளார்கள்.
ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானாவைப் பிரிப்பதற்கு, ஆந்திர மாநிலத்தின் பிற பகுதிகளில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
தெலுங்கானா பிரச்சினை, தற்போது, மத்தியிலும்,
ஆந்திரத்திலும் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கு, பெரும்
நெருக்கடியைக் கொடுத்துள்ளதாக
விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தெலுங்கானா விவகாரம் பற்றி
ஆராய்வதற்காக மத்திய அரசில் பிரதமர் தலைமையில் குழுவொன்று கூடியுள்ளதாக,
பிரதமர் அலுவலகத்தில் துணை அமைச்சராக
இருக்கும் வி.நாராயணசாமி தமிழோசையிடம் கூறினார்.
தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தின் மற்றைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையில் ஒருமித்த கருத்தைக் கொண்டு வருவதிலேயே பெரும்
சிக்கல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment