Tuesday 5 July 2011

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள் இந்திய உளவுப் பிரிவுகள் விசாரணை

தமிழக மீனவர்களை பிடித்து செல்லும் இலங்கை கடற்படையினருடன் சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து இந்திய உளவுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 23 மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைப்படி மத்திய அரசு தலையிட்டதால் விடுவிக்கப்பட்டனர். திங்கட்கிழமை 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர். தமிழக மீனவர்களை பிடிக்க வரும் இலங்கை கடற்படை கப்பலில், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


 இதுபற்றி தமிழக கியூ பிரிவு மரைன் பொலிஸார் மற்றும் மத்திய அரசின் புலனாய்வு பணியாளர் ஆகிய உளவு பிரிவினர் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

கடந்தாண்டு கச்சதீவில் சீன வீரர்கள் முகாமிட்டிருந்ததை திருவிழாவிற்கு அங்கு சென்ற தமிழக மீனவர்கள் பார்த்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படை கப்பலில் வரும் சீன வீரர்கள், தமிழக எல்லை பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கண்காணித்து வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment