1974ஆம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தில், புதிய தனியார் பள்ளிகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது என்றும் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிகளை முறைப்படுத்துவதாகக் கூறி, புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது சட்டத்திற்கு எதிரானது என்றும் பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய இரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார்.
''புதிதாக உருவாக்கப்பட்ட மெட்ரிக் பள்ளிகளை, பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிகளுடன் ஒப்பிட முடியாது. இந்தப் பள்ளிகள் அனைத்தும் வணிக நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. மெட்ரிக் பள்ளிகள் தான் தரமான கல்வியை அளிக்கின்றன என்று அவற்றை நிர்வாகம் முன்வைக்கும் வாதம் உண்மை அல்ல'' என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எந்தவொரு மெட்ரிக் பள்ளிக்கும் அங்கீகாரம் தரக்கூடாது என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் வேறு கூறியுள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு, இது தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

No comments:
Post a Comment