Tuesday, 5 July 2011

சமச்சீர் கல்வித் திட்டம்! இன்று விடிவு ஏற்படுமா?

JULY 05, சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தின் பாடத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு அமல்படுத்துவதை தள்ளி வைக்கும் விதமாக, சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்', தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்தது.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சமச்சீர் பாடத் திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு ஜூலை 6ம் தேதிக்குள் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன்பின் ஒரு வாரத்தில் பிரதான வழக்கை ஐகோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஒன்பது பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயார் செய்துள்ளது. ஐகோர்ட்டில் நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாக்கல் செய்யப்படவில்லை. ஐகோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment