Tuesday 5 July 2011

எகிப்தில் கொடூரம்: கியாஸ் பைப் லைன் தகர்ப்பு

எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார். ராணுவத்திடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. வரும் செப்டம்பரில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என ராணுவ அரசு கூறியுள்ளது.

நாட்டின் நிர்வாக பணிகளை சீர்திருத்தும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை எடுப்பதில் ராணுவ அரசு தீவிரம் காட்டவில்லை என எகிப்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெய்ரோ நகரில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் இன்னும் போராட்டம் நீடிக்கிறது.

இந்நிலையில் எகிப்தில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் நாடுகளுக்கு செல்லும் எரிபொருள் பைப் லைனை போராட்டக்காரர்கள் நேற்று குண்டு வைத்து தகர்த்தனர்.

சினாய் தீபகற்ப பகுதியில் உள்ள பிர் அல் அப்த் என்ற இடத்தில் கார் குண்டு மூலம் இந்த அசம்பாவிதம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பைப் லைன் தகர்க்கப்பட்டதால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக இஸ்ரேல், ஜோர்டன் நாடுகளுக்கு எரிபொருள் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment