போதை மருந்து, ஆயுதம் கடத்தல் வழக்கில் துனிஷிய மாஜி அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
துனிஷியா நாட்டின் அதிபராக கடந்த 23 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் ஜினே பெல் அபிதின் பென் அலி. இவரது ஆட்சிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் மக்கள் கிளர்ச்சி செய்தனர்.
இதனால் இவர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி சவூதியில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் இவர் மீது போதை மருந்து மற்றும் ஆயுத கடத்தல் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
துனிஷ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மாஜி அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சத்து 40 ஆயிரம் டொலர் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
ஏற்கனவே இவர் மீது அரசு பணத்தை மோசடி செய்தது உள்ளிட்ட 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் 20ம் திகதியன்று தான் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ,64 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment