Thursday 9 June 2011

விழித்துக்கொள், வேலை வந்துவிட்டது !!!


இதயமுள்ளவனே...!!!!!!!
எட்டிப்பார்
எட்டுத்திசையும் எம் சமுதாயம்
சர்வதேசத்தின் சதிவலையில் சள்ளடையாகிறது......!
ஜாஹிளியத்துக்கு
ஜால்ரா அடிக்கும்
ஜாதியாய் போனதால்
காலை முதல்
கருக்கள் வரை
துன்பத்தில்
தேய்ந்து வருகிறது ......!
விழித்துக்கொள் வேலை வந்துவிட்டது............!!!!!!!

மணங்கள் ம‎ணக்க மனங்கள் மாறட்டும்....


பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) ம‎னமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமி‎ன்றி அனுபவிக்கலாம்.  அல்குர் ஆ‎ன்:4-4
    பிற மதங்களில் இ‏றைவைன [‏இறைவனி‎ன் பொருத்தத்தை] அடைதலை முத்தி நிலை எ‎ன்கிறார்கள். இதனை அடைய ஆசைகளை துறத்தல் ேவண்டும். இல்லற வாழ்க்கையை வாழ்ந்தோ வாழாமலோ அனைத்தையும் துறந்த பி‎ன்பே ஆண்டவனை அடைய முடியும் என்கிறார்கள்.

இசைப்பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை....


இசைப்பிரியர்கள் இசையைக் கேட்பதில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரி்க்கை விடுத்துள்ளார் துபையைச் சேர்ந்த செவிப்புலனாய்வாளர் ஒருவர். டாக்டர் ஏ.வி.ரேஷா துபையில் உள்ள மெட்கேர்
என்ற மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் செவி மற்றும் கேட்கும் திறனை ஆய்வு செய்யும் ஆய்வாளர் ( audiologist).
தற்போது எம்பி 3 மூலமாக பாட்டு கேட்பது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த பிளேயரில் சிறிதளவு சத்தத்துடன் தொடர்ந்து கேட்டாலும் காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்துள்ளதாக டாக்டர் ரேஷா தெரிவித்துள்ளார். சத்தத்தின் அளவை டெசிபல் என்று குறிப்பிடுகின்றனர். 90 டெசிபல் சத்தத்துடன் 8 மணிநேரம் ஒருவர் இசையைக் கேட்டால் கண்டிப்பாக அவருடைய கேட்கும் சக்தியை இழந்து விடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புது வித யுக்திகளை கையாளும் திருடர்கள்

திருட்டு என்பது அனைவராலும் வெறுக்கப்படும் தொழில் என்றாலும் சில திருடர்களின் திருட்டு முயற்சிகளைப் பார்த்தால் வியப்பும் திகைப்பும் சில சமயங்களில் நகைப்பும் ஏற்படுகின்றன.


ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்த 2 திருடர்களின் கூட்டணி அடித்த கொள்ளை இந்த ரகத்தைச் சேர்ந்தது.

அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் சீனா: நிபுணர்கள் எச்சரிக்கை

Muthupet-PFI
வரும் 2016ம் ஆண்டில் விண்ணை முட்டும் வகையிலான 800 அதி உயர கட்டடங்களை சீனா நிறுவும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இத்தகைய திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு மாற்றுத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என அந்நாட்டு நிபுணர்கள் அரசை வலியுறுத்துவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.டி.பி.ஐ ஆதரவுடன் பா.ஜ.க பஞ்.துணைத்தலைவரை தோற்கடித்த காங்.-முஸ்லிம் லீக்


மஞ்சேஷ்வரம்(கேரளா):பா.ஜ.கவை சார்ந்த பஞ்சாயத்து துணை தலைவரை சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் (எஸ்.டி.பி.ஐ) ஆதரவுடன் காங்.-முஸ்லீக் கூட்டணி தோற்கடித்தது.

கேரள மாநிலம் காஸர்கோடு மாவட்டத்தில் மஞ்சேஷ்வரம் கிராம பஞ்சாயத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த துணை தலைவர் தேர்தலில்  பா.ஜ.கவை சார்ந்த ஹரிச்சந்திரனுக்கு மு.லீக் உறுப்பினர் ஒருவர் கட்சி மாறி வாக்களித்தார். மேலும் காங்கிரஸ் உறுப்பினரின் வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹரிச்சந்திரன் பஞ்.துணை தலைவரானார்.

திருவாரூர் கலெக்டராக முனியநாதன் பொறுப்பேற்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட கலெக்டராக முனியநாதன் நேற்று பொறுப்பேற்றார்.திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருந்த பாஸ்கரன் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். 


நாகை மாவட்ட மாவட்ட கலெக்டராக இருந்த முனியநாதன் திருவாரூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்ற கலெக்டர் முனியநாதன் கூறியதாவது: மாவட்டத்தில் விவசாயம் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்றபாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் விரைந்து செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., தங்கவேல் உடனிருந்தார்

குஜராத் இனப்படுகொலை:போலீஸ் அதிகாரிகளுக்கு பங்குண்டு-முன்னாள் டி.ஜி.பி


அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையில் மூத்த போலீஸ் அதிகார்களுக்கு பங்குண்டு என முன்னாள் டி.ஜி.பி ஆர்.என்.பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அசோசியேசன் கலவரம் நடக்கும்போது கூட்டம் நடத்தி போலீசார் அவர்களின் அரசியல்சட்ட ரீதியான கடமையை நிறைவேற்றவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதே இதற்கு ஆதாரம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோலான்குன்றுகளை மீட்போம்-இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை


டமாஸ்கஸ்:இஸ்ரேலின் எல்லை பகுதியில் ராணுவ அணிவகுப்பு நடத்துவது தொடரும்.இஸ்ரேல் அபகரித்த கோலன் குன்றுகளின் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் திரும்பிவருவார்கள் என சிரியா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1967-ஆம் ஆண்டு நடந்த போரின் நினைவுதினத்தில் கோலான் குன்றுக்கு வந்த ஃபலஸ்தீன், சிரியா குடிமக்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த போரில்தான் இஸ்ரேல் சிரியாவிற்கு சொந்தமான கோலான் குன்றுகளை அபகரித்தது. 

மரணத்தை பற்றி கவலையில்லை : லிபியாவின் பாதுகாப்பே எமது நோக்கம் : கடாபி


அமெரிக்க - மேற்குலக கூட்டுப்படைகளின் இராணுவ தாக்குதலை எதிர்த்து  தயார் எனவும் லிபிய ஜனாதிபதி மௌமர் கடாபி அறிவித்துள்ளார்.
இவ் அறிவித்தல் அடங்கிய புதிய பதிவு ஒன்றை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியுள்ளது. கடாபியின், 'பால் அல் அஸீசியா' இல்ல வளாகத்தில் நேட்டோ படைகள் குண்டுதாக்குதல் நடத்தியதை அடுத்து கடாபியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் இவ்வீடியோ பதிவு ஒளிபரப்பட்டுள்ளது.

ராம்தேவ் ஓர் ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்ட் - ப.சிதம்பரம்


அன்னா   ஹசாரேயைப்போல் தானும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி மக்கள் கவனத்தை ஈர்க்க முயன்ற ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்துக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

"கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலம் புத்தூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உச்சமன்றமான அகிலபாரத பிரதிநிதி சபா ஓர் கூட்டம் நடத்தியது. அதில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அனைத்து அமைப்புகளையும், தனிநபர்களையும் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 2-ஆம் தேதி ஊழலுக்கு எதிரான முன்னணியை அமைப்பதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்தது. பாபா ராம்தேவ் அதன் ஆதரவாளர். எனவே ராம்தேவின் இந்தச் செயலுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இருக்கிறது" என தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.

ஆயுத போராட்டதிற்கு அழைப்பு விடுக்கும் பயங்கரவாத சாமியார்!!


Muthupet PFI : மத்திய அரசுக்கு எதிராக அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது, ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார். 

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போலி சாமியார் யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 4ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். 

நள்ளிரவில் போராட்டம் நடந்த ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்த போலீஸ், ராம்தேவ், அவரது ஆதரவாளர்களை வெளியேற்றியது. போலீசார் நடத்திய தடியடியில் சிலர் காயமடைந்தனர்.