Wednesday 15 May 2013

மாவீரன் ஹைதர் அலி மற்றும் தீரன் திப்பு சுல்தானிற்கு மணிமண்டபம்! பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது!



தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வாசித்த அறிக்கையில் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை அறிவிப்பு செய்தார். 

மாவீரன் ஹைதர் அலி, திப்புசுல்தானுக்கு தமிழ்நாட்டில் மணிமண்டபம்! : ஜெயலலிதா!


முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்தும் அரும்பணியை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. 

சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு : பிஜேபி தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு!


புது டெல்லி: குஜராத்தில் கொல்லப்பட்ட சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் பிஜேபி மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான குலாப் சந்த் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

படகு கவிழ்ந்ததில் பலர் பலியாகினர்: மியான்மரில் கொடூர சம்பவம்!


வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மகாசேன் புயல், வங்கதேசம் மற்றும் மியான்மர் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளை புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கன மழையும் பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

இனக்கலவர வழக்கு: முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை விதிக்க கோரும் முடிவு நிறுத்தம்! - "நரபலி நாயகன்" அரசு அறிவிப்பு!


குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து திட்டமிட்டபடி கலவரத்தை அரங்கேற்றினர். இதில், நரோடா பாட்டியா சம்பவத்தில் 96 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கை தனிக்கோர்ட்டு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கியது. 

பெங்களூர் குண்டுவெடிப்பு! கோவையை குறிவைக்கும் காவல்துறை!


பெங்களூரு மல்லேஸ்வரம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்பது பேர் தமிழக போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பெங்களூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.