பெங்களூரு மல்லேஸ்வரம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்பது பேர் தமிழக போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பெங்களூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆனால் அப்பாவி இளைஞர்களையும், சிறைவாசிகளின் நலனுக்காகவும் பாடுபட்ட கிச்சான் புகாரியையும் போலீசார் கைது செய்து சித்திரவதை செய்வதாக தமிழக முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சிம்கார்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவருக்கு சொந்தமானது என கண்டறிந்த காவல்துறையினர் அது பற்றிய விசாரணையை மேற்கொள்ளாமல், சிம்கார்டு திருடப்பட்டு குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி விசாரணையை முஸ்லிம்கள் பக்கமே திருப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் பல இடங்களில் காவல்துறை தனிப்படையினர் சோதனை நடத்தினர். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் தனிப்படை அதிகாரி முருகன் தலைமையிலான காவல்துறையினர், இந்த சோதனையில் ஈடுபட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்த காவல்துறையினர், அவர்கள் அடையாளம் காட்டிய வீடுகளை சோதனையிட்டனர். உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை உள்ளிட்ட இடங்களில் பல வீடுகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அம்மோனியம் நைட்ரேட், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையின் இந்த சோதனையும், கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்களும் ஜோடிக்கப்பட்டவை என்பது போலீசாரின் நடவடிக்கை காட்டிக்கொடுப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெங்களூர் குண்டுவெடிப்பு குறித்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டுமே காவல்துறை குறி வைப்பதாகவும், கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளையும் அவற்றின் விசாரணைகளையும் கவனத்தில் கொள்ளாமல் காவல்துறை செயல்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : நியூ இந்திய
No comments:
Post a Comment