தீவிரவாத குற்றச்சாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காலித் முஜாஹித் நேற்று (18/05) மாலை மர்மமான முறையில் இறந்து விட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும்போது போலீஸ் வேனில் மாரடைப்பால் மரணம் என போலீஸ் கூறுகிறது, ஜெயிலை விட்டு செல்லும்போது பூரண உடல் நலத்துடன் சென்றதாக ஜெயில் கண்காணிப்பாளர் கூறுகிறார். இது திட்டமிட்ட கொலை என்கிறார், காலிதின் வழக்கறிஞர் ரந்தேர் சிங்.
Sunday, 19 May 2013
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு 6 ஆண்டுகள் நிறைவு! - கைது செய்யப்படாத குற்றவாளிகள்!
9 பேர் கொல்லப்பட்டு, 58 பேர் காயமடைய காரணமான ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 6 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. ஆனால், இக்குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய சூத்திரதாரிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா, சுரேஷ் நாயர் ஆகிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை இன்னமும் தலைமறைவாகவே உள்ளனர். அவர்களை கைது செய்ய புலனாய்வு ஏஜன்சிகளால் இதுவரை முடியவில்லை.
நீதி கேட்டு குடியரசு தலைவருக்கு அப்துல் நாஸர் மஃதனி கடிதம்!
கொச்சி: நிரபராதியான தனக்கு நீதி வேண்டும் என்று கோரி கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கைதுச்செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநிலபி.டி.பி கட்சியின் தலைவரான அப்துல் நாஸர் மஃதனி இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தனக்கு நீதி வேண்டும் என்று கோரி 35 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.சிறை சூப்பிரண்டு வழியாக கடந்த வெள்ளிக்கிழமை இக்கடிதம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளத்.இக்கடிதத்தின் நகல் ஊடகங்களுக்கு பி.டி.பி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ரஜீப் மூலம் அளிக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)