Tuesday, 4 October 2011

கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து புத்தகங்களையும் தேடி கொடுக்கும் தேடுபொறி.

புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கூகிள் தேடிக்கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்றால் கூகிளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தறவிரக்க முடியும் ஆனால் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு  தேடுபொறி உள்ளது.

தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ யின் வெற்றிக் கணக்கு துவங்கியது

சென்னை: தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வெற்றிக்கணக்கு நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே அதன் வெற்றிக்கணக்கு தொடங்கியுள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருத்ராபூர்:குர்ஆனை அவமதித்தவர்களை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தாக்குதல் – 4 பேர் மரணம்

புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதி கேட்டு முஸ்லிம்களும் சமூக ஆர்வலர்களும் போராடிவரும் நிலையில் தற்போது மேலும் அதுபோன்று ஒரு சம்பவம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிஜேபி ஆளும் உத்தரகான்ட் மாநிலம் ருத்ராபூர் நகரில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவத்தில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் நகர் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.