Tuesday 4 October 2011

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் 18 வீதத்தை மட்டும் சுந்திர நாடாக அங்கீகரிக்க கோரும் அப்பாஸ்

அப்பாஸ் வரைந்துள்ள பலஸ்தீனை ஐ.நாவில் ஒரு நாடாக அங்கீகரிக்குமாறு  கோரிய அவரின் கோரிக்கை நேற்று ஐ.நா பாதுகாப்பு சபையில் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் அடுத்த வாரம் ஆராயப்படும் என்றும் முடிவாகியுள்ளது.


பலஸ்தீனம் 194 ஆவது நாடாக அங்கீகாரம் பெறவேண்டுமானால் ஐ.நா.பாதுகாப்பு சபையில் குறைந்து 9 நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் அத்துடன் எந்த நிரந்தர உறுப்பு நாடும்  விட்ரோ- Veto- அதிகாரத்தை பயன்படுத்தி கோரிக்கையை நிராகரிக்காமல் இருக்கவேண்டும் அதன் பின்னர் அந்த கோரிக்கை ஐ.நா. பொது சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை பெறவேண்டும் அப்போதுதான் அப்பாஸின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

ஐ.நா பாதுகாப்பு சபையில் 15 நாடுகள் அங்கம் வகிக்கின்றது. இதின் அமெரிக்கா, பிரிட்டன் , பிரான்ஸ் , சீனா , ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகள் இவற்றிடம் விட்ரோ அதிகாரம் உண்டு , மற்ற 10 உறுப்பு நாடுகள் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை தேர்வு  செய்யபடுகின்றன.

 

பலஸ்தீன அப்பாஸ் நிர்வாகம் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை இறைமையுள்ள சுதந்திர தனி நாடாக “sovereign, independent state” அங்கீகாரம் வழங்குமாறு கடந்த 16 ஆம் தேதி கோரியது. அப்பாசின் கோரிக்கை நேற்று ஆராயப்பட்டுள்ளதுடன் அடுத்த வாரம் மேலும் ஆராயப்பட்டு பாதுகாப்பு சபை கோரிக்கையை பொது சபைக்கு அனுப்புமா ? அல்லது நிராகரிக்குமா ? என்பது தெரியவரும் , பெரும்பாலும் அப்பாஸின் கோரிக்கை ஐ.நா.பாதுகாப்பு சபையை விட்டும் வெளியே வராது தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பலஸ்தீனில் பெரும்பாலான மக்கள் அப்பாஸின் இந்த முயற்சியை வரவேற்கவில்லை என்று பலஸ்தீன் அரபு செய்திகள் தெரிவிக்கின்றன. பலஸ்தீனில் இஸ்ரேலுடனா ஆக்கிரமிப்பு எதிர் போராட்ட களத்தில் முன்னின்று போராடும் ஹமாஸ் ,மற்றும் ஏனைய போராளி குழுக்களும் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளன. தற்போது இது தொடர்பாக பகிரங்கமாக பேச தொடங்கியுள்ளன. இது இவ்வாறு இருக்க பலஸ்தீன தலைவர் அப்பாஸின் PLO அமைப்பின் பல முக்கியஸ்தர்களும் அப்பாஸின் ஐநா முயற்சி பலஸ்தீன மக்களுக்கு செய்யும் வரலாற்று துரோகம் என்று  விமர்சித்துள்ளனர்.

அப்பாஸ் முன்வைத்துள்ள பலஸ்தீன நாடு மிக குறைந்த பலஸ்தீன நிலத்தைத்தான் உள்வாங்கியுள்ளது. அப்பாஸ் கூறும் பலஸ்தீன் எல்லைக்குள் 18 வீதமான பலஸ்தீனர்கள் நிலம் மட்டும்தான் உள்வாங்கப்படுகின்றது. 

இது தொடர்பாக பலஸ்தீன விடுதலை அமைப்பின் -PLO- பலஸ்தீன தேசிய கவுன்சில் உறுப்பினர் டாக்டர் . றேபிய் ஹளோம் கருத்து தெரிவிக்கையில் ஐ.நா சபையின் 181 ஆவது தீர்மானம் பலஸ்தீனர்களுக்கு 46 வீதமான நிலத்தை வழங்குகின்றது ஆனால் அப்பாஸ் 18 வீதமான பலஸ்தீன் நிலத்தில் பலஸ்தீன் என்ற நாட்டை அங்கீகரிக்குமாறு கோரியுள்ளார். பலஸ்தீன தலைவர்கள் மக்களை ஏமாற்ற வேண்டாம் அவ்வாறு ஏமாற்றுவதன் மூலம் வரலாற்றால் சபிக்கப்படவும் துரோகிகள் என்று தூற்றப்படவும் காரணமாக வேண்டாம் என்றும்  எச்சரித்துள்ளார்.

 
இங்கு மிக குறைந்த நிலபரப்பை கூட அமெரிக்காவும் , இஸ்ரேலும் அங்கீகரிக்க தயாராக இல்லை என்பது சிந்தனைக்குரியது. ஐ.நா.வில்  பலஸ்தீனை மிக குறுகிய எல்லைகளுடன் 194 ஆவது நாடாக அங்கீகரிக்குமாறு கோரும் அப்பாஸின் கோரிக்கை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தயாரித்துள்ளது அத்தகைய நாடகத்திற்கு  பிரதம கூத்தாடியாக அப்பாஸ் செயல்பட்டுள்ளாரா ? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இதேவேளை பலஸ்தீன மக்கள் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து நேற்று சனி கிழமை ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இடம்பெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஹமாஸ் அரசியல் துறை பொறுப்பாளர் காலித் மிஸ்ஷால் பலஸ்தீன ” நிலங்கள் மீட்கப்பட்ட வேண்டும் அதன் பின்னர் பலஸ்தீன் என்ற நாடு பிரகடனப் படுத்தப்பட வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றியுள்ள அவர், பலஸ்தீனம் மீதான தொடரும் இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களும் தாக்குதல்களும் , இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து அனைத்து பலஸ்தீன நிலங்களையும் விடுவித்து உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்த தேவையான தொடரான எதிர்போராட்டத்தை வேண்டி நிற்கின்றது. நாங்கள் விடுதலையையும் , மோசடிகளுக்கு முடிவை கோரும் மக்களுடன் இருக்கின்றோம், விடுதலையை யாசிக்கும் மக்களுடன் இணைந்து அரசியல் தீர்வை தேடி போராடும் ஹமாஸுக்கு அரபு நாட்டு ஆட்சியாளர்கள் பக்க துணையாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

நேற்று இடம்பெற்ற அந்த நிகழ்வில் உரையாற்றியுள்ள ஈரான் ஆன்மீக தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமைனி பலஸ்தீன் ,இஸ்ரேல என்ற இருநாட்டு கோரிக்கையை சாடியுள்ளதுடன் பலஸ்தீனர்கள் 1967 க்கு முன்புள்ள எல்லையுடன் பலஸ்தீனை மட்டுப்படுத்தக் கூடாது அவ்வாறு செய்வது இஸ்ரேலை அங்கீகரித்ததாகி விடும் அங்குள்ள முழு நிலமும் பலஸ்தீனுக்குரியது. 

இஸ்ரேலை கேன்சர் கட்டி என்று வர்ணித்துள்ள அவர் அந்த கட்டி அகற்றப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஈரான் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க வில்லை என்பதுடன் . இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருந்து அகற்றப் படவேண்டும் என்று தெரிவித்தமையும் குறிபிடத்தக்கது. தற்போது அப்பாஸின் ஐநா முயற்சியையும் நிராகரித்துள்ளது.

முஸ்லிம் நாடுக்கில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை கொண்ட நாடுகளில் பட்டியலில் இருந்து துருக்கியும் , எகிப்தும் தூர விலக தொடங்கியுள்ளது. ஐ.நா. பொது சபையில் உரையாற்றிய துருக்கி பிரதமர் அர்துகான் அணைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்ரேல் என்ற நாடுதான் காரணம் என்று தெரிவித்திருந்தமை குறிபிடதக்கது.


பலஸ்தீன் அன்றும் இன்றும் 1946-2000

No comments:

Post a Comment