Tuesday 4 October 2011

தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ யின் வெற்றிக் கணக்கு துவங்கியது

சென்னை: தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வெற்றிக்கணக்கு நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே அதன் வெற்றிக்கணக்கு தொடங்கியுள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எஸ்.டி.பி.ஐ (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) என்னும் அரசியல் பேரியக்கம் தொடங்கப்பட்டது. சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான அரசிய்ல் சக்தியாய் திகழ வேண்டும் என்ற அடிப்படையில் எஸ்.டி.பி.ஐ நாடு முழுவதும் வேகத்துடனும் அதே சமயம் விவேகத்துடனும் பயனித்து வருகிறது.
தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கியது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் எந்தக்கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து முதன் முறையாக களம் இறங்கிய எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் தோல்வி அடைந்தாலும் கணிசமான வாக்குகளை பெற்று பெறும் பெறும் கட்சிகளின் புருவத்தை உயரவைத்தது.
தற்போது நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் முதன் முறையாக இஸ்லாமிய, கிறிஸ்தவ இயக்கங்கள் மற்றும்க் தலித்கள் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து கூட்டணியாக தேர்தல் களம் காண இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஊராட்சிகளிலும், வார்டுகளிலும் எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.  தமிழகத்தில் இரு மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் முன்னரே எஸ்.டி.பி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் அதே சமயம் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இனி வரும் காலங்களில் எஸ்.டி.பி.ஐ இந்திய தேசத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கீழ்கண்ட எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
எண்ஊர் பெயர்வார்டு எண்வெற்றிபெற்றவரின் பெயர்மாவட்டம்
1சித்தார்கோட்டை5பரகத் நிஷாஇராமநாதபுரம்
2சிக்கல்6பஷீர் அஹமதுஇராமநாதபுரம்
3ஏர்வாடி66சிதுரத் பேகம்இராமநாதபுரம்
4சிறுபோது2செய்யது அலிஇராமநாதபுரம்
5மல்லிப்பட்டிணம்3நஜிமுன்னிஷாதஞ்சாவூர்
6இருமேணி3அப்துல் ஹக்இராமநாதபுரம்

7கேம்பலபாத்
ரிஃபாய் ஆதம் பாஷாதூத்துக்குடி
8செய்துங்கநல்லூர்
ஜொஹராதூத்துக்குடி
9மியான்பள்ளி
ஜீனத்தூத்துக்குடி
குறிப்பு: தகவல் 03.10.2011 வரை
நன்றி : அதிரை தண்டர் 

No comments:

Post a Comment