Monday, 3 October 2011

முத்துப்பேட்டை பேரூராட்சியின் தேர்தல் வாக்குறுதி! மாவட்ட SDPI கட்சி வெளியீடு:

முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் 01.10.2011 ஆம் தேதியன்று இக்கட்சியின் மாவட்ட தலைவர். தப்ரே ஆழம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி: பேரவைத் தலைவரை நோக்கி மின்விசிறி வீச்சு


தேசிய மாநாட்டுக் கட்சி தொண்டர் சயீத் யூசுப் மரணம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று அமளி ஏற்பட்டது.
சட்டப்பேரவைத் தலைவர் முகமது அக்பர் லோனேவுக்கும் எதிர்க்கட்சியான பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையே இன்று அவை தொடங்கியதும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கி சட்டப்பேரவைத் தலைவர் கடுமையான வார்த்தைகளைக் கூறிய போது, அவரை நோக்கி உறுப்பினர் ஒருவர் மின்விசிறி ஒன்றை வீசினார். இதனால் அவையில் பயங்கர அமளி ஏற்பட்டது.

மணிப்பூரில் போராட்டம்: அன்றாட வாழ்க்கை பாதிப்பு

Security personnel and forensic experts inspect the site after a bomb exploded at a busy market in Imphal on Monday. மணிப்பூரில் நடக்கும் போராட்டம் காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடக்கும் சாலை மறியல் போராட்டங்களால் நாட்டின் பிற பகுதியில் இருந்து மணிப்பூர் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலைமையை சமாளிக்க முடியாமல் மணிப்பூர் அரசு தவித்து வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை:உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. வாபஸ் பெறப்பட்ட மற்றும் தள்ளுபடியான வேட்புமனுக்கள் பற்றி தகவல்களுடன், போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி இடங்கள் பற்றிய விவரத்தையும் மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.

ஒபாமா அரசுக்கு எதிராக நியூயார்க் நகரில் ஆர்ப்பாட்டம்: 700 பேர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து ப்ரூக்ளின் பாலத்தில் பேரணி நடத்த முயன்ற ஆயிரக்கணக்கானோரில் 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பிற நகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்க அரசியலில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை நீக்க வேண்டும், அமெரிக்க சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வு அகற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல் “வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம்” தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

சிரியாவில் எதிர்க்கட்சிகளின் தேசிய கவுன்சில் உருவாக்கம்

வெளிநாடுகளில் இயங்கும் சிரியா எதிர்க் கட்சிகள் அனைத்தும் “தேசிய ஐக்கிய கவுன்சில்” என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளன.

இதன் மூலம் அந்நாட்டின் எதிர்க் கட்சிகள் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்களை இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.