Thursday, 14 July 2011

பிரதீப்குமார் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்பு

புதுதில்லி : முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலர் பிரதீப்குமார் புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இன்று (ஜுலை 14)  பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ரம்ஜான் நோன்பு கஞ்சி: பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி- ஜெ உத்தரவு Connect with

சென்னை: ரம்ஜான் நோன்பு திறப்புக்காக கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஆந்திராவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நலத்திட்ட உதவிகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு பணிகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஏழை எளிய மக்களுக்கும், காய்கறி மற்றும் பழம் வியாபாரிகளுக்கும் நான்கு சக்கர தள்ளு வண்டியை இலவசமாக விநியோகம் செய்துள்ளது. சுய தொழில் தொடங்குவதற்கு உதவியாக இவ்வாறு விநியோகிக்கப்பட்டது. நெல்லூர், கர்னூல், யெமிஞ்சூர், அதோனி மற்றும் நன்டியால் போன்ற பகுதிகளில் வழங்கப்பட்டது.

எகிப்து கலவரம் : 700 போலிஸ் உயரதிகாரிகள் அதிரடி நீக்கம்

எகிப்து கலவரத்தின் போது அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு காரணமாக இருந்த 700 போலிஸ் உயரதிகாரிகள் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஸ்ரீராமசேனாவின் பகிரங்க பயங்கரவாத பயிற்சி

பெங்களூர் : ஹிந்து தீவிரவாத அமைப்பான ஸ்ரீராமசேனா நடத்தும் பயங்கரவாத பயிற்சி முகாமில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

புதிய மாநில அலுவலகம் திறப்பு விழா

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலமையகம் சென்னை மண்ணடியில் 12-07-2011 அன்று மாலை 5.00 மணி அளவில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

மாநிலத்தலைவர் சகோதரர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.