Thursday 14 July 2011

பிரதீப்குமார் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்பு

புதுதில்லி : முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலர் பிரதீப்குமார் புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இன்று (ஜுலை 14)  பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பதவியேற்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சரவைச் செயலர் அஜித் சேத், தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டடீர் கலந்துகொண்டனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் சுமார் 10 நிமிடங்கள் இந்த பதவியேற்பு விழா நடந்தது. பிரதீப்குமார் 1972-ம் ஆண்டு ஹரியானா மாநில ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்.

இதற்கு முன்பு ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த பி.ஜே.தாமஸ் மீது கேரளாவில் ஊழல் வழக்கு நிலுவையில் இருந்ததால் அவரை அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்தது செல்லாது என உச்சநீதிமன்றம் மார்ச் 3ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து அவரது நியமனத்தை குடியரசுத் தலைவர் ரத்து செய்தார். அப்போது முதல் இந்தப் பதவி காலியாக இருந்து வந்தது.

No comments:

Post a Comment