Wednesday 18 May 2011

மெரீனா கடற்கரையில் மாயமான 5 வயது சிறுமி கதி என்ன?; ஒருவாரம் ஆகியும் கிடைக்காததால் பெற்றோர் கண்ணீர்!!

ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். இவரது மனைவி ஹசீனா. இவர்களது 5 வயது இரட்டை குழந்தைகள் தம்மன்னா, ரிகாத்.

கடந்த 11-ந்தேதி குழந்தைகளுடன் பெற்றோர் மெரீனா கடற்கரைக்கு சென்றனர். அங்கு உழைப்பாளர் சிலை அருகே சிறுமியும், சிறுவனும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சிறுமி தம்மன்னா மாயமாகி விட்டாள்.

பெற்றோர் பதறியடித்தவாறு கடற்கரை முழுவதும் தேடினார்கள். அதன் பிறகு அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சிறுமி மாயமாகி ஒரு வாரம் ஆகியும் கதி என்ன என்று தெரியவில்லை. சிறுமியை யாராவது கடத்திச்சென்றார்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிறுமி தம்மன்னா எல்.கே.ஜி. படித்தாள். அவளுக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம், இந்தி மட்டுமே தெரியும். குழந்தையை காணாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி உள்ளனர்.

அவர்கள் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 11-ந்தேதி சிறுமி தம்மன்னாவும், சிறுவன் ரிகாத்தும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவரும் பஞ்சு மிட்டாய் வேண்டும் என்று கேட்டதால் காசு கொடுத்து இருவரையும் அனுப்பி வைத்தோம்.

சற்று தொலைவில் இருந்த பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் இருவரும் சென்று வாங்கினார்கள். அப்போது காசு குறைவாக இருந்ததால் தம்மன்னா அங்கேயே நின்று கொண்டு ரிகாத்தை காசு வாங்கி வருமாறு அனுப்பி வைத்தாள்.

ரிகாத் திரும்ப சென்றபோது தம்மன்னாவை காணவில்லை என்று சொன்னான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அந்தப்பகுதி முழுவதும் தேடினோம். பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் கேட்டோம். அவர் குழந்தையை கவனிக்கவில்லை என்று கூறி விட்டார்.

போலீசார் என் மகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்களும் தகவல் தெரிந்தால் 8056104888 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

நேட்டோ ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தான் படை மீது தாக்குதல் !




    ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள நேட்டோ படைகளின் இரண்டு ஹெலிகொப்டர்கள் ஆப்கான் எல்லையை கடந்து பாகிஸ்தான் வட வஜிரிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது இதில் இரண்டு பாகிஸ்தான் எல்லை படைவீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் இராணுவம் உடனடியான சந்திப்பு ஒன்றுக்கு நேட்டோ தரப்பை அழைத்துள்ளதுடன்  கடுமையான எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளில் நேட்டோ படைகளின் இரண்டு ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தான் வசறிஸ்தான் பகுதிக்குள் வழமை போன்று அத்துமீறியுள்ளது இதன் போது பாகிஸ்தான் தரப்பில் இருந்து இரண்டு தடவைகள் ஹெலிகொப்டர்கள் நோக்கி சுடப்பட்டுள்ளது அந்த தாக்குதலுக்கு நேட்டோ ஹெலிகொப்டர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்க  விரிவாக
மற்றும் ஒரு செய்தி முதல் தாக்குதலை நேட்டோ ஹெலிகொப்டர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் பாகிஸ்தான் வான்பரப்பில் 10 நிமிடங்களுக்கு அதிகமாக நேட்டோ ஹெலிகொப்டர்கள் பறந்ததாகவும் தெரிவிக்கின்றது, கடந்த திங்கள் கிழமையும் அமெரிக்க உளவு விமானங்கள் பாகிஸ்தான் மீது குண்டுகளை வீசியது இதன்போது 12 போராளிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வட வஜிரிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் படைவீரர்கள் கொல்லப்பட்டும் நான்கு பேர் காயமடைந்தும் இருந்தனர் இதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ படைகளின் விநியோக பாதையை தற்காலிகமாக மூடியது.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சற்று சூடான கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது கடந்த கிழமை பாகிஸ்தான் பாராளுமன்றம் அமெரிக்காவின் பாகிஸ்தான் மண்ணில் மீதான அறிவிக்கபடாத தாக்குதலை கண்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது தொடரும் இந்த கருத்து முறுகலை தணிக்க ராஜதந்திரிகள் இரு நாடுகளுக்கிடையில் பறந்தனர் இந்த நிலையில் தற்போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மக்களிடம் இந்த சம்பவங்கள் கடுமையான எதிர்ப்பை பெற்று வருகின்றது பாகிஸ்தான் எதிர் கட்சிகள் கடுமையான தமது எதிர்ப்பை காட்டி வருகின்றது முழுமையாக அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் பாகிஸ்தான் நிர்வாகமும், இராணுவ தலைமையும் பாகிஸ்தான்  மக்களை திசை திருப்ப நாடகம் ஆடிவருவதாக விமர்சிக்கப்படுகின்றது.

50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கிடு வழங்கியது ஜாமியா மில்லியா

Jamia_Millia_Islamia
புதுடில்லி:சிறுபான்மையின கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் (JMI) நிர்வாகம்,வருகிற கல்வியாண்டு முதல் 50 சதவிகிதம் இடஒதுக்கிட்டை அனைத்து துறையிலும் இடஒதுக்கிடு வழங்க முடிவு செய்துள்ளது.
 இந்தியவிலேயே ஒரே சிறுபான்மை கல்வி நிறுவனமான ஜாமியா உள் இடஒதுக்கிடாக 10 சதவிகிதம் முஸ்லிம் பென்களுக்கும்,10 சதவிகிதம் முஸ்லிம் ஒ.பி.சி மற்றும் தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.
 பல்கலைகழகம் அனுப்பிய சுற்றறிகையில் 42 சதவிகிதம் பொதுவாகவும் மீதி 3 சதவிகிதம் உடல் ஊனமுற்றோருக்கும் வழங்கும். இதற்கு முன்னதாக 25 சதவிகிதம் ஜாமியா பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கொடுத்து கொண்டுள்ளதை தற்போது அதை 5 சதவிகிதமாக குறைத்துள்ளது.மேலும் 5 வருடம் அப்ப்ள்ளியிலேயே படித்து இருக்க வேண்டும்.
 ஏற்கனவே விண்ணப்பம் கொடுத்தவர்கள்,www.jamia.ac.in என்ற இனையதளத்தில் பதிவிறக்கம் செய்து அவர்களுடைய பிரிவை நிரப்பி மறுபடியும் கொடுக்க வேண்டும் என பல்கலைகழக செய்தி தொடர்பாளார் தெரிவித்தார்.
 பிப் 22 சிறுபான்மை கல்வி நிறுவனம் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை சிறுபான்மை பல்கலைகழகமாக அங்கீகரித்ததும் இவ் இடஒதுக்கிடு அமல் படுத்தபடுகிறது.

மஸ்ஜிதுல் அக்ஸாவை மூட இஸ்ரேல் சதிவலை

Al-aqsa-mosque01_cropped
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபை, ஜெருசலத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் பாங்கு சொல்வதை தடை செய்ய முயன்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மஸ்ஜிதுல் அக்ஸாவில் ‘அதான்’ சொல்வது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளை தொந்தரவு பண்ணுவதாகவும்,நடு நிசியில் தமது தூக்கத்தை கலைப்பதாகவும் அவர்கள் கடந்த ஒரு வருடமாக முறையிடுவதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெருசலத்தில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளில் ஒரு குழுவினர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினால் பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலிய சிப்பாயை  விடுவிக்கும் வரை மஸ்ஜிதுல் அக்ஸாவை மூடவேண்டும் என்றும் தெரிவித்து வருவதாகவும் பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு கரையில் இருந்து வரும் 15 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜெருசலத்தில் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதை கடந்தவர்களும் , விசேச அனுமதி பத்திரம் பெற்றவர்களும் மட்டும் அங்கு தொழுவதற்கு அனுமதிக்கபடுகின்றனர்.
 மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு கீழ் தோண்டி வரும் சுரங்கத்தால் ஏற்கனவே மஸ்ஜிதுல் அக்ஸா வெடிப்பு எடுக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ‘அதானை’யும் தடை செய்து மஸ்ஜிதுல் அக்ஸாவையும் மூடிவிடும் ஆபத்தை தாம் எதிர்கொள்வதாக பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இஸ்ரேல் வெளிவரும் Haaretz என்ற பிரபல பத்திரிகை இஸ்ரேல் 140,000 பலஸ்தீனர்களின் குடியுரிமையை பறித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 1967 -1994 காலப் பகுதியில் பலஸ்தீனில் இருந்து வெளியேறி 6 வருடங்களுக்கு மேல் திரும்பி வராமல் தமது குடியுரிமையை புதுப்பிக்காத பலஸ்தீனர்கள் குடியுரிமையை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ஜெருசலத்தில் 7ஆண்டுகள் ஜெருசலத்தை விட்டு வெளியில் வசித்தவர்கள் ஜெருசலத்தில் மீண்டும் குடியேரும் உரிமையை இன்றும் இழந்து வருகின்றனர்.
 இவர்கள் திரும்பிவரும்போது அங்கு மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு அராஜகம் இன்றும் தொடர்கின்றது என்பது குறிபிடத்தக்கது.

மன ஊனமில்லா மணமகன் தேவை!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


மன ஊனமில்லா மணமகன் தேவை




‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’
(அல்குர்ஆன் : 4:4)



வல்ல அல்லாஹ் மணமகளுக்கு மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல, நீ கொடுக்க வேண்டிய மஹரை பெண்ணான என்னிடம் கேட்க, நீ கேட்ட மஹரை கொடுக்க என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில் தன் அனைத்து சுகங்களையும் இழந்து!

என்னைப் பார்க்க வந்த உன் தாயும், உன் சகோதரியும் பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்?  என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன் வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார் நீங்கள் தெளிவாக சொன்னால்தான் அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!

உன்தாயின் பட்டியல் தொடங்கியது

லட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம், பிறை அனைத்தையும் கணக்கு எடுத்து ஒரு வருட விதவிதமான சீர், நகை பின் எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய? எத்தனை பேருக்கு பசியாற தருவிய? (சாப்பாட்டையே பார்க்காத மாதிரி) மனை உள்ளது வீட்டை கட்டி கொடுத்து விடுங்கள்!
(தற்பொழுது குடிசைதான் வீடாம்) என் குடும்ப சூழ்நிலையில் இந்த சம்பந்தம் அமையுமா?
மணமேடையில் அமருவோமா? என்று மனதுக்குள் அழ! என் தந்தையோ நோயின் வாசல்படியை தட்ட நானோ வீட்டின் நிலைப்படியில்! எத்தனையோ பேர் என்னை பெண் பார்த்து சென்ற பிறகும் இன்னும் முதிர் கன்னியாக உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை! ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!

பெண் பார்க்க வந்தவர்களில் சிலர் என் பையன் சிகப்பு பெண்தான் பார்க்க சொல்கிறான் பெண் கருப்புதான் இருந்தாலும் நாங்கள் கேட்பதை (வரதட்சனையை) தந்து விட்டால் என் பையனை
சம்மதிக்க வைத்து விடுகிறோம்! பணம் படைத்தவர்களின் கருப்பு நிற பெண் கரையேறி விடும்!
பணம் இல்லா குடும்பத்து கருப்பு நிற பெண்களை கடலில் தள்ளி விடலாமா?

பெண்ணை பெற்றவன் ஜமாத்தில் லட்டர் வாங்கி ஊரில் பிச்சை எடுத்தால் கேவலம் என்று முகம் தெரியா ஊரில் பள்ளியில் தொழுகை முடிந்தவுடன் பாவா குமராளி வந்திருக்கிறேன்
திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது உதவி செய்யுங்கள் என்று துண்டை ஏந்தி நிற்பதை
பார்த்திருக்கிறாயா? பார்த்தவுடன் கோபம் வரவில்லையா? என்ன செய்தாய் நீ? என் தாய் தந்தை மனம் கோணாமல் நடப்பேன் என்றாய்! இளைஞனே திருமணம் முடிக்கும் நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில் மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால் இதுநாள்வரை தாய், தந்தை
பேச்சைகேட்காத நீ கூட திருமண பேச்சு வார்த்தையில் மட்டும் என் தாய் தந்தையின் மனம்
நோக நடக்கமாட்டேன் என்கிறாய்! இளைஞனே உன் தெருவில் திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க நீயோ பணம் படைத்த வீட்டில் பெண்ணை தேட! அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு வேற வழி இல்லை என்று பிறமத பையனோடு ஓட! இப்பொழு வருகிறது உனக்கு கோபம் என் தெரு பெண்எப்படி ஓடலாம்! அவளை கண்டால் வெட்டுவேன் என்று!
அவள் ஓடியதற்கு நீயும் உன்னை போன்றவர்களும் காரணம் இல்லையா? முகமூடி திருடன் இரவில் திருடுகிறான் நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு பகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு கொள்ளை அடிக்கிறாய் வரதட்சனை என்ற பெயரில் மணமகள் வீட்டில்
மனசாட்சியும் இல்லை! மறுமை பயமும் இல்லை உனக்கு! மணமகனே நான் உன்னிடம் கேட்கிறேன் நீ என்ன மஹர் தருவாய் எனக்கு - எதற்காக என்கிறாயா? உன் வீட்டில் வந்து
ஆயுள் முழுவதும் உனக்கும் உன் குடும்பத்திற்கும் சேவை செய்வதற்கும்! குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக! உன் பிள்ளையை பெற்று தந்தவுடன் நானும் தகப்பன் என்று பெருமிதம் அடைவதற்காக! என் தாய் தந்தையை என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை நான் வாழ்ந்த இடத்தையே விட்டு விட்டு நீ  காட்டில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு
வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்? இளைஞர்களே! இன்னுமா உறக்கம்?  உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும் விழித்தெழுங்கள்! இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம் நாளை மஹ்ஷர் பெருவெளியில் இறுதி தீர்ப்பின் நாளின் அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்வாய் தாய் தந்தையை கை காட்டுவாயா? முடியாது இளைஞர்களே! நீங்கள் மட்டும்தான் உங்களின் காரியத்திற்கு பதில் சொல்வீர்கள் வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும் இந்த வரதட்சனை என்னும் கொடுமையை அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு
மஹர் கொடுத்து மணமுடியுங்கள்! இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.



இறைவன் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக! 

நன்றி: ஹார்பார் கிளை - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.