Wednesday, 18 May 2011

நேட்டோ ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தான் படை மீது தாக்குதல் !




    ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள நேட்டோ படைகளின் இரண்டு ஹெலிகொப்டர்கள் ஆப்கான் எல்லையை கடந்து பாகிஸ்தான் வட வஜிரிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது இதில் இரண்டு பாகிஸ்தான் எல்லை படைவீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் இராணுவம் உடனடியான சந்திப்பு ஒன்றுக்கு நேட்டோ தரப்பை அழைத்துள்ளதுடன்  கடுமையான எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளில் நேட்டோ படைகளின் இரண்டு ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தான் வசறிஸ்தான் பகுதிக்குள் வழமை போன்று அத்துமீறியுள்ளது இதன் போது பாகிஸ்தான் தரப்பில் இருந்து இரண்டு தடவைகள் ஹெலிகொப்டர்கள் நோக்கி சுடப்பட்டுள்ளது அந்த தாக்குதலுக்கு நேட்டோ ஹெலிகொப்டர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்க  விரிவாக
மற்றும் ஒரு செய்தி முதல் தாக்குதலை நேட்டோ ஹெலிகொப்டர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் பாகிஸ்தான் வான்பரப்பில் 10 நிமிடங்களுக்கு அதிகமாக நேட்டோ ஹெலிகொப்டர்கள் பறந்ததாகவும் தெரிவிக்கின்றது, கடந்த திங்கள் கிழமையும் அமெரிக்க உளவு விமானங்கள் பாகிஸ்தான் மீது குண்டுகளை வீசியது இதன்போது 12 போராளிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வட வஜிரிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் படைவீரர்கள் கொல்லப்பட்டும் நான்கு பேர் காயமடைந்தும் இருந்தனர் இதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ படைகளின் விநியோக பாதையை தற்காலிகமாக மூடியது.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சற்று சூடான கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது கடந்த கிழமை பாகிஸ்தான் பாராளுமன்றம் அமெரிக்காவின் பாகிஸ்தான் மண்ணில் மீதான அறிவிக்கபடாத தாக்குதலை கண்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது தொடரும் இந்த கருத்து முறுகலை தணிக்க ராஜதந்திரிகள் இரு நாடுகளுக்கிடையில் பறந்தனர் இந்த நிலையில் தற்போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மக்களிடம் இந்த சம்பவங்கள் கடுமையான எதிர்ப்பை பெற்று வருகின்றது பாகிஸ்தான் எதிர் கட்சிகள் கடுமையான தமது எதிர்ப்பை காட்டி வருகின்றது முழுமையாக அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் பாகிஸ்தான் நிர்வாகமும், இராணுவ தலைமையும் பாகிஸ்தான்  மக்களை திசை திருப்ப நாடகம் ஆடிவருவதாக விமர்சிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment