Monday, 26 September 2011

சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை - மன்னர் அப்துல்லா உத்தரவு

Saudi Womenசவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
அங்கு பெண்கள் ஓட்டு போடக்கூடாது. மற்றும் ஓட்டு போடுவதற்கும் உரிமை இல்லை. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள நகரசபை தேர்தலில் போட்டியிடவும், ஓட்டு போடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில் பயங்கரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

 லண்டனின் வெம்பிளி அரங்கில் மினாஜ் உல் குரான் எனும் இஸ்லாமியக் குழுவின் 12,000 முஸ்லிம்கள் திரண்டு பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
2012இல் சமாதானத்தை ஏற்படுத்தும் திட்டத்திற்காக ஒரு மில்லியன் மக்களை ஆன்லைனில் கையெழுத்திட வைத்து இந்த மாநாடு கூட்டப்பட்டிருந்தது.
10 வருடமாக இடம்பெறும் பயங்கரவாதச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என இந்த மாநாடு ஒரு செய்தியை வெளிப்படுத்தும் என மினாஜ்-உல்-குரானின் நிறுவுனர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி-மார்க்சிஸ்ட் கம்யூ. அறிவிப்பு

Vijayakanth and G RamakrishnanVijayakanth and G Ramakrishnanசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் கூட்டணி வைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

SDPIன் முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் அறிவிப்பு

முத்துப்பேட்டை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... இன்ஷா அல்லாஹ் வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு  SDPI ன் வேட்பாளராக அ. அபூபக்கர் சித்திக் அவர்கள் போட்டி இடுவார்கள் என்று மாநில தலைமை அறிவித்துள்ளது.