Monday 26 September 2011

லண்டனில் பயங்கரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

 லண்டனின் வெம்பிளி அரங்கில் மினாஜ் உல் குரான் எனும் இஸ்லாமியக் குழுவின் 12,000 முஸ்லிம்கள் திரண்டு பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
2012இல் சமாதானத்தை ஏற்படுத்தும் திட்டத்திற்காக ஒரு மில்லியன் மக்களை ஆன்லைனில் கையெழுத்திட வைத்து இந்த மாநாடு கூட்டப்பட்டிருந்தது.
10 வருடமாக இடம்பெறும் பயங்கரவாதச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என இந்த மாநாடு ஒரு செய்தியை வெளிப்படுத்தும் என மினாஜ்-உல்-குரானின் நிறுவுனர் தெரிவித்துள்ளார்.

இவரது பேச்சின் போது பயங்கரமான 9/11 என்று ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட போதும் அவருக்குக் கைதட்டல்கள் பாராட்டாகக் கிடைத்தன.
வழமையாக இந்த அரங்கில் பொப் நட்சத்திரங்கள் தான் கூட்டங்களை இழுப்பார்கள். ஆனால் இன்று இந்த முஸ்லிம் கல்வியாளர் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தார்.
இவரது சொற்கள் கருத்தாழமிக்கவையாக இருந்தன. இஸ்லாமிற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்த அவர் பயங்கரவாதத்தினையும் பயங்கரவாதிகளையும் கண்டித்தார்.
இக்கூட்டத்தை ஒழுங்குசெய்ய இவர்களுக்கு ஒரு வருடம் தேவைப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பலதரப்பட்ட மொழிகளில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதன் போது முன்னரே பதியப்பட்ட பல தலைவர்களது கருத்துக்களும் ஒலி, ஒளி பரப்பப்ட்டன.
இங்கு பலதரப்பட்ட சமயங்களினதும் குருமார்களும் கலந்து கொண்டு அமைதிக்கான வேண்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் முஸ்லிம் உலகில் ஜனநாயகம் மற்றும் நல்ல செயற்பாடுகளுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் ஏழ்மைக்கு எதிராகவும் பிரகடனங்கள் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment