Sunday 17 July 2011

சென்னை மாநகரில் மசாஜ் கிளப் என்ற பெயரில் பாலியல் தொழில்: பெண் கைது

சென்னை : சென்னை மாநகரில் மசாஜ் கிளப் மற்றும் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை என்ற பெயரில் பல இடங்களில் கவர்ச்சிகரமாக விளம்பரபடுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து மயக்கி பாலியல் தொழில் செய்வதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம்பெண்களை மீட்கவும், சென்னை காவல் ஆணையாளர் திரிபாதி மற்றும் காவல் கூடுதல் ஆணையாளர் அபய் குமார்சிங் உத்தரவிட்டனர்.
வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக உள்நுழைந்து பணி புரியும் தொழிலாளர்களை தடுக்கும் வகையில் பயோமெட்ரிக் முறையில் (விரல் ரேகை பதிவு) கணக்கெடுப்பு புள்ளிவிபரம் ஒன்றை மலேசிய அரசு தொடங்கியுள்ளது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு:எஃப்.பி.ஐ விசாரணை

வாஷிங்டன்/லண்டன்:தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சிக்கியுள்ள சர்வதேச ஊடக தரகு முதலாளி மர்டோக்கிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ விசாரணையை துவக்கியுள்ளது. 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி நியூயார் இரட்டைக்கோபுரத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டது தொடர்பான குற்றச்சாட்டை எஃப்.பி.ஐ விசாரணை நடத்துகிறது. குடியரசு கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் கிங் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

மும்பை குண்டு வெடிப்பு: சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி:மும்பை தொடர் குண்டுவெடிப்பிலும், ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் ஒரே வெடிப்பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளது என கருதப்படுகிறது.