Friday 1 July 2011

ரஹ்மத் நகரில் சுகாதார சீர் கேடு !

முத்துப்பேட்டை ரஹ்மத் நகர் தெருவில் கடந்த ஒரு வருட காலமாக கழிவு நீர் உடைத்து கொண்டு ஓடுகிறது இதை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்யும் போது மட்டும் பார்த்து விட்டு செல்வார்கள் அதற்க்கான மாற்றுவழியை என்ன என்பதை ஆராய்ந்தது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். எத்தனையோ முறை  நிர்வாகத்திடம் முறையிட்டும் சரியான நடவடிக்கைஎடுக்கவில்லை.

இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கும் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

மாஸ்கோ :  உலகின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இத்தகவலை ரஷ்ய கடற்படைத் தளபதி விளாடிமிர் வைசோட்ஸ்கி கூறியுள்ளார். எனினும், "நெர்பா" என்னும் அந்த நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவுக்கு எப்போது வழங்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

செல்போனால் மூளை புற்று நோய் ஏற்படும்?

லண்டன் : பொதுவாக செல்போன் உபயோகிப்பதால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக அளவில் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்று நோய் ஏற்படும் என தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக்கை ஒரு கை பார்க்க வரும் கூகுள் ப்ளஸ்!!

சமூக வலை தளங்கள் எனப்படும் ஃபேஸ் புக் மற்றும் ட்விட்டரின் வரவு ஜாம்பவான் இணைய தளங்களை அசைத்துப் பார்த்துவிட்டன.

இதன் விளைவு பெரிய நிறுவனங்களும் ஒரு சமூக வலைத் தளத்தை ஆரம்பிக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.



காவிகளின் வெரியர்களின் சுயரூபம்!

பல நூறு வருடங்களுக்கு முன்பாக முகாலாய மன்னர்கள் இந்திய நாட்டை ஆட்சி செய்து வந்தனர். வரலாற்று குறிப்பின் படி கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை முகாலாய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். 

மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் - வன்மையாக கண்டிக்கிறது PFI

சமீபத்தில் கர்நாடகா மாநில பத்திரிக்கைகளில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியது. ஹுன்சூரில் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளி கே.எஃப்.டி இயக்கத்தைச் சார்ந்தவர் என்றும் அந்த இயக்கத்திற்காக வசூல் செய்யும் போது இந்த கொலை நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகியது.

அணு உலைகளை மூடும் திட்டம்: பாராளுமன்றத்தில் ஒப்புதல்

ஜெர்மனியில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டிற்குள் 8 முக்கிய அணு உலைகளை நிரந்தரமாக மூடிவிடுதற்கான ஒப்புதல் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் புகுஷிமா, டெய்சி ஆகிய அணு உலைகள் வெடித்து சிதறின. இதனால் கதிர்வீச்சு தாக்குதல் ஏற்பட்டது.

உலகின் மிக நீளமான பாலம்

சீனாவில் கடலுக்கு மேலாக கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்களின் பாவனைக்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 30ல் குரூப் 2 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.

குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி ஜுலை 30 ந் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தேர்வு தள்ளிப்போகும் என்ற வதந்திகளை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

பினாமி சொத்துகளை அரசே எடுத்துக்கொள்ள சட்டத் திருத்தம்

பினாமி சொத்துகளை அரசே கையகப்படுத்தி எடுத்துக்கொள்ள வகை செய்யும் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத் திருத்த மசோதா வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கலாகிறது.
ஊழல் மற்றும் லோக்பால் சட்டம் குறித்து மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக வரிந்துக்கட்டிக்கொண்டு பிரச்சனை எழுப்ப தயாராகி வரும் நிலையில், அதனை சமாளிக்கும் விதமாகவே இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக தெரிகிறது.

அலுவலகத்தில் மதியம் சோர்வு ஏற்படுவது ஏன்?

அலுவலகத்தில் சிலர் மதியம் ஒரு பத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு கோழி தூக்கம் போட்டால் போதும்;பூஸ்ட் குடித்தது போன்று புத்துணர்ச்சியாகி விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் மதிய நேரம் 15 முதல் 30 நிமிடங்கள் வரையிலான இதுபோன்ற தூக்கம் நல்லது;இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள்.

வங்கதேசம்: இடைக்கால ஆட்சி ஒழிப்பு

வங்கதேசத்தில் பொதுத்தேர்தல்கள் நடத்தும்போது கட்சிசாரா இடைக்கால அர்சாங்கம் ஒன்று பதவியில் இருக்கவேண்டும் என்று கூறும் சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று ரத்து செய்திருக்கிறது.


அமெரிக்காவின் அந்நிய நாடுகள் மீதான ஆக்கிரமிப்புச்செலவு ரூ.19,40,00,00,00,00,000

வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புற்கு செலவழிக்கப்பட்ட தொகை 3.7 லட்சம் கோடி டாலர் முதல் 4.4 லட்சம் கோடி டாலர் வரையாகும் (அதாவது 164 லட்சம் கோடி முதல் 194 லட்சம் கோடி வரையிலாகும்).

பால் தாக்கரேவின் சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு

மும்பை:சிவசேனை தலைவர் பால் தாக்கரேவின் சொத்துக்களை முடக்க பீகார் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. பால் தாக்கரே தனது கட்சியின் பத்திரிகையான “சாம்னாவில்’ 2008-ல் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். இந்த கட்டுரை பிகார் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக ராஜேஷ்குமார் சிங் என்ற வழக்கறிஞர் பிகார் மாநில ஆரா சப்டிவிஷனல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

"'சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே!"

"சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

"அமெரிக்காவினதும் அதன் துஷ்ட சகாவான ஸியோனிஸ இஸ்ரேலினதும் எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகவே இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று கடந்த புதன்கிழமை (29.06.2011) தெஹ்ரானில் இடம்பெற்ற 28ஆவது சர்வதேச திருக்குர்ஆன் போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஈரானிய அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமானவை : அறிவியல் இயக்கம் ஆய்வுத் தகவல்

சென்னை : சமச்சீர் கல்வி பாடநூல்கள், பழைய பாடப் புத்தகங்களை விட தரமானவை என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, அந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், கல்வியாளர் ராஜகோபாலன், பேராசிரியர் கருணானந்தம் உள்ளிட்டோர் சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியது: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமற்றவை என்று தமிழக அரசு நிறுத்திவைத்துள்ளது. இந்தப் புத்தகங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 3 இடங்களில் வைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

உ.பி. தேர்தலில் மாயாவதிக்கு மரண அடி கிடைக்கும்: சர்வே

டெல்லி: உ.பி சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை இழக்கும் என்று கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், சமாஜ்வாடி கட்சி மைனாரிட்டி ஆட்சியை அமைக்கும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நான்காவது இடமே கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா கொல்லப்பட்டதாக சிபிஐ சந்தேகம்

சென்னை & டெல்லி: 2ஜி விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகவும் சாட்சியாகவும் இருந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதி்க் பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ சந்தேகி்க்கிறது.



சிறுகோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உண்டாகும் நாடுகளின் பட்டியல் வெளியீடு

விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

லிபியா மீது பிரான்ஸ் ஆயுதங்கள் வீச்சு: ஆப்பிரிக்க ஒன்றியம் கடும் கண்டனம்

லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் குழுக்கள் பகுதியில் பிரான்ஸ் ஆயுதங்கள் வான் வழியே வீசப்பட்டு உள்ளன.
இதனால் அந்தப் பிராந்தியம் முழுவதும் அபாய நிலைக்கு ஆளாகி உள்ளது. பிரான்சின் இந்த நடவடிக்கைக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலிஸ் படைகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை

சிரியா ஆட்சியின் மனித உரிமை மீறல் செயல்களுக்கு ஆதரவு அளித்த அந்நாட்டு போலிஸ் படை மற்றும் ஈரான் தேசிய போலிசுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
சிரியாவின் நான்கு பெரிய பாதுகாப்பு படைகளில் ஒன்றான சிரியா அரசியல் பாதுகாப்பு இயக்குனரகம் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் துணை அமைப்பாக செயல்படுகிறது.

பிரான்ஸ் அதிபர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை ஒருவர் தாக்கி கீழே தள்ளினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி தெற்கு பிரான்சில் உள்ள டொலுயீசில் மேயர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் பிராக்ஸ் நகருக்கு சென்றார்.