Friday 1 July 2011

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலிஸ் படைகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை

சிரியா ஆட்சியின் மனித உரிமை மீறல் செயல்களுக்கு ஆதரவு அளித்த அந்நாட்டு போலிஸ் படை மற்றும் ஈரான் தேசிய போலிசுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
சிரியாவின் நான்கு பெரிய பாதுகாப்பு படைகளில் ஒன்றான சிரியா அரசியல் பாதுகாப்பு இயக்குனரகம் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் துணை அமைப்பாக செயல்படுகிறது.


இந்த அமைப்பினர் பெரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அதனால் இந்த படைப்பிரிவு மற்றும் சிரியா விமானப் படை புலனாய்வு பிரிவு மற்றும் ஈரான் தேசிய போலிஸ் தலைவர் மற்றும் துணை தலைவர் மீது அமெரிக்கா நிதித்துறை பொருளாதார தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் பயங்கரவாதம் மற்றும் நிதி புலனாய்வு பிரிவு செயலர் டேவிட் எஸ் கோகென் கூறியதாவது:  சிரியாவில் மனித உரிமை மீறல் செயல்களுக்கு ஈரான் நாட்டு ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை ஆதரவு அளித்து வருவது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அமைதியான வழியில் கிளர்ச்சியாளர்கள் போராட வழிவிட வேண்டும்.
இதை விட்டு அப்பாவி கிளர்ச்சியாளர்கள் மீது வன்முறையை ஏவக் கூடாது. வன்முறைக்கு முடிவு கட்டி ஆட்சி மாற்றத்திற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் எடுக்க வேண்டும்.
இதற்காகவே தற்போது இரு நாட்டு போலிஸ் படை மீது பொருளாதார தடை கொண்டு வரப்பட்டுள்ளது. சிரியா மக்களுக்கு உரிமைகள் கிடைக்க அதிபர் அசாத் உறுதி அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment