Friday, 22 July 2011

சிறந்த வர்த்தக நகராக மாறிவரும் துபை

உலகின் மிகச் சிறந்த வர்த்தக நகரங்களுள் ஒன்றாக துபை மாறி வருகிறது.

உலகின் தலைசிறந்த 10 வர்த்தக நகரங்களுள் 9வது இடத்தில் துபை உள்ளது. சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள 56 சதவீத நிறுவனங்கள் துபையில் செயல்படுகின்றன என்று சிபி ரிச்சர்ட் எல்லிஸ் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


அரசு பஸ்களில் டிக்கெட் வழங்க நவீன மின்னணு கருவிக்கு ரூ.10 கோடி அனுமதி: ஜெயலலிதா

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், வழக்கமான முறையில் அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கும் முறைக்கு மாற்றாக, நேரடித் தொடர்புள்ள (ஆன்லைன்) கையடக்க மின்னணு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கினால் பயணம் செய்பவருக்கு எளிதில் பயணச்சீட்டு வழங்கிட இயலும். அதே போன்று நடத்துனரின் பணியும் எளிதாகும்.
 

மூன்றாண்டு பி.எல்.: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் நடத்தப்படும் மூன்று ஆண்டு சட்டப் (பி.எல்.) படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

மூன்றாண்டு பி.எல். படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 25 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு டாக்டர்  அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு





அதிபருக்கு எதிராக சினிகலில் மக்கள் கிளர்ச்சி

டாக்கர் : சினிகல் நாட்டின் அதிபருக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தினர்.

அண்ணா பல்கலைக்கழகம்: பொறியியல் கல்லூரிகளுக்கு 'ரேங்க்' பட்டியல் வெளியீடு

சென்னை : தனது கட்டுப்பாட்டில் வரும் 167 பொறியியல் கல்லூரிகளின், 'ரேங்க்' பட்டியலை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வெளியிட்டது.

கடந்த ஜனவரியில் வெளியான தேர்வு முடிவு தேர்ச்சி சதவீதம் அடிப்படையில் ஒரு பட்டியலையும், பாட வாரியான தேர்வு முடிவு அடிப்படையில் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அமர்சிங்கிடம் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை

ராஜ்ய சபா உறுப்பினர் அமர்சிங், டெல்லி குற்றப்புலனாய்வு காவற்துறையினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


லோக் ஆயுக்தவும் லோக்பாலும்!

குழாயடிச் சண்டை என்று ஒன்றுண்டு. ஒரு குடம் தண்ணீரை யார் பிடிப்பது என்கிற சண்டையில் இரு வீட்டு ரகசிய விவகாரங்கள் நாற்சந்திக்கு வரும். அந்த மாதிரியான குழாயடிச் சண்டையைத்தான் இப்போது மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாகவே சூடாகக் கிளப்பியுள்ளன பாஜகவும் காங்கிரசும்.

ஆளில்லா கண்காணிப்பு விமானம் பாகிஸ்தானில் அறிமுகம்

கடற்கரை பகுதிகளை கண்காணிக்கவும், எதிரி படைகளின் தொலைத்தொடர்பு வசதிகளை துண்டிக்கவும் பாகிஸ்தான் தனது கடற்படைக்காக ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

5 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு

TN Govt Logoசென்னை: 5 போலீஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (சட்டம்- ஒழுங்கு) செந்தில்குமார், கோவை நகர துணை போலீஸ் கமிஷனராக (குற்றம் மற்றும் போக்குவரத்து) மாற்றப்பட்டுள்ளார்.

முஸ்லிம் பெண்களை குறிவைக்கும் பஜ்ரங்தள் அமைப்பு!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது!

டெல்லி: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


உள்ளாட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு தான் உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

புளியங்குடியில் பள்ளிக்கு தீ வைப்பு 2 லட்சம் பொருட்கள் சேதம்

புளியங்குடி:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி நகராட்சியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றிற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.