Saturday, 23 July 2011

நடுவானத்தில் மோதவிருந்த விமானங்கள் நூலிழையில் தப்பின!

பாட்னா: டெல்லியிலிருந்து கவுஹாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் எதிரே வந்துக்கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதவிருந்த விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியது.

ஜெட் ஏர்வேஸ் விமானமும் மற்றொரு சர்வதேச விமானமும் பாட்னா எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அவை நேருக்கு நேர் வந்து மோத இருந்த வேளையில் இரு விமானிகளும் திறமையாக செயல் பட்டதால் அந்த விபத்திலிருந்து இரு விமானங்களும் தப்பின.

போலி கல்விச் சான்றிதழ்: பிரச்சனையில் ராம்தேவ் உதவியாளர் பாலகிருஷ்ணா

வாரனாசி: யோகா குரு பாபா ராம்தேவின் முதன்மை உதவியாளரின் கல்விச் சான்றிதழ்கள் போலி என்று சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் அன்னா ஹஸாரே போன்று ஊழலுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். பின்னர் தனது உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதை அடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். ஒரு புறம் பாபா ராம்தேவ் உலக அளவில் உண்ணாவிரதத்தால் பிரபலமாக மறு புறம் சிபிஐ அவரது கோடிக்கணக்கான சொத்து விவரங்களைத் தோண்ட ஆரம்பித்தது.

வெடிகுண்டு நாடகம் நடத்திய அதிகாரியை பணி நீக்கம் செய்ய கோரி கோவையில் மாபெரும் ஆர்பாட்டம்

கடந்த 2006 ஜீலை 22 ஆம் தேதி கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி 5 அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து கோவை நகரத்தையே பெரும் பீதிக்குள்ளாகிய முன்னாள் உளவுதுறை அதிகாரி ரத்தின சபாபதியை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையக குழு உறுப்பினர் பதவிலிருந்து நீக்கக் கோரி 22-7-11 அன்று கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தியாவின் இரு (வேறுபட்ட) இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள்

பாகிஸ்தானும் இந்தியாவும் பிரிந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று, இந்தியாவில் இஸ்லாமியக் கருத்துக்கள் குழப்பத்தில் உள்ளன.  குழப்பத்துக்குக் காரணம், இன்றைய சூழ்நிலையை இஸ்லாமை எப்படிப் பின்பற்றுவது என்பதாகவே இருக்கின்றது.

இந்திய ராணுவத்தின் வெறித்தனம்​: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு ​- கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

ஸ்ரீநகர் : ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் அங்க சுத்தி (தொழுகைக்காக ஒழு) செய்ய வீட்டிலிருந்து வெளியே வந்த முஸ்லிம் இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த இந்திய ராணுவத்தினர் இருவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டரில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் உறுதியளித்துள்ளார். சி்றப்பு ஆயுத அதிகாரச் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் குற்றவாளி – என்.ஐ.ஏ

ஜெய்ப்பூர் : ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அவ்வமைப்பின் மூத்த தலைவருமான இந்திரேஷ் குமாரும், ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த போலீசார் அதிரடி சோதனை: ரூ.10 கோடி தங்கம், ரொக்கம் பறிமுதல்

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்த போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.10 கோடி தங்க நகை, ரொக்கம், ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.  

லோக் ஆயுக்த அறிக்கை மீது நடவடிக்கை: கர்நாடக ஆளுநர் உறுதி


பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒய்எம்சிஏ பயிற்சிப்பள்ளியின் 100-வது ஆண்டு விழாவை குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைக்கிறார் ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ். 

17 மாவட்ட நீதிபதிகள் நியமனம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


புது தில்லி, ஜூலை 22: தமிழகத்தில் 2011-ம் ஆண்டு 17 மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில் மாநில அரசு, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர், புதிதாக நியமிக்கப்பட்ட 17 நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. 

நார்வேயில் பாரிய குண்டுவெடிப்பு : பிரதமர் அலுவலகம், உட்பட அரசு அலுவலகங்கள் கடும் சேதம் இதுவரைக்கும் 87 பேர் பலி பலர் படுகாயம்

நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று  (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று வந்த தகவல் படி இதுவரைக்கும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

எகிப்து மற்றும் லிபியாவை போல் மாலவி நாட்டிலும் அதிபருக்கு எதிராக சீறிப்பாயும் பொதுமக்கள் போராட்டம் (வீடியோ இணைப்பு)

ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் அதிபர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

எகிப்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் லிபியாவில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அதிபர் கடாபிக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

எகிப்து நாட்டில் புதிய அரசிற்கு அமைச்சர்கள் நியமனம்

எகிப்து நாட்டில் அதிபர் முபாரக் பதவி விலகியதை அடுத்து புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ராணுவ தலைமை தளபதி ஹூசைன் தந்தாவி தலைமையில் சுப்ரீம் கவுன்சில் குழு பதவியேற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின் இடஒதுக்கீடு! பாபுலர் ஃ ப்ரண்ட் ஆலோசனை!

முஸ்லிம் சமுதாயத்தின் நியாயமான பிரச்சனையான இட ஒதுக்கீடு கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் சிறுபான்மை துறை அமைச்சர் சல்வாம் குர்ஷித் அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் சுப்ரமணியம் சுவாமிக்கு ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பா?

புதுடெல்லி:அமெரிக்க கைக்கூலியாகவும், அரசியல் கோமாளியாகவும் முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

மனித உரிமை போராளியை எதிர்த்த மனிதகுல விரோதிகள்!

திருச்சூர் : கேரளாவின் கலாச்சார நகரமாக கருதப்படும் திருச்சூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகைத்தந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய்க்கு எதிராக பா.ஜ.கவை சார்ந்த  ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினர்.