Tuesday, 6 December 2011

பாப்ரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர் கோரிக்கை


Flag
சென்னை:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு19 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாப்ரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம்களின் இறை இல்லமான பாப்ரி மஸ்ஜித் சங்க்பரிவார மதவெறியர்களால் தகர்க்கப்பட்டு இன்றோடு19 வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை.

பாப்ரி மஸ்ஜித் நினைவு தினம்: தமிழகத்தில் கண்டன போராட்டம் மற்றும் கருத்தரங்குகள்..


bb
சென்னை:1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் முஸ்லிம்களின் இறையில்லமும், இந்தியாவின் வரலாற்று சின்னமுமான பாப்ரி மஸ்ஜித் சங்க்பரிவார ஹிந்துத்துவ பாசிச பயங்கரவாதிகளால் இடித்துத்தள்ளப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும் முஸ்லிம்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை.மேலும் இந்த பயங்கரவாத செயலை புரிந்தவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கின்றனர். நீதி மறுக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் மேலும் மேலும் அநீதிக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் சார்பாக கண்டன நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.

என்றும் நம் நினைவில்…! நீதிக்காக ஏங்கும் பாபரி!


பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும், பின்னர் அது மணல் மேடாகத் தகர்க்கப்பட்டதும், பயங்கரவாத ஃபாசிச ஹிந்துத்துவ கோர முகங்களும், நாடு முழுவதும் அதனையொட்டி நடந்த முஸ்லிம் இனப் படுகொலைகளும், இழந்த முஸ்லிம்களின் ரத்தமும், சதையும், அதனை மீட்டெடுப்பதற்கான முஸ்லிம்களின் நீண்டகாலப் போராட்டமும்தான்!

பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்று கடமை...


சென்னை: பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ஐ முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"1992 டிசம்பர் 6 " மதச்சாற்பற்ற இந்திய தேசத்திற்கு எதிராக ஃபாசிஸ சங்கப்பரிவார குண்டர்கள் தொடுத்த தாக்குதல், இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கிய நாள், 600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இறையில்லமான பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

சமூக நீதி மாநாட்டை சீர்குழைக்க சதி திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்...


 
புதுடெல்லி: டெல்லியில் ஸ்ரீராமசேனா, பகத்சிங் க்ராந்தி சேனா போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் நடத்தி வரும் தாக்குதல்களின் சதித் திட்டங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் கேரளாவைச் சார்ந்த சபரிமலை தந்திரி(முதன்மை சாமியார்)யின் பேரனான ராகுல் ஈஸ்வருக்கு பங்கிருப்ப்பதாக டெல்லி போலீஸின் உளவுத்துறை பிரிவு அறிக்கை அளித்துள்ளது.

பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, வழக்கை விரைந்து முடிக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை


tehlan baqqawiசென்னை:பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாபரி மஸ்ஜித் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியில்; “டிசம்பர் 6,1992 இதே, நாளில் இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர்.அம்பேத்கர் நினைவு நாளில் அயோத்தியில் “பாபரி மஸ்ஜித்” பாஸிச சங்பரிவாரக் கும்பலால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. கோடிக்கணக்ககான மக்களின் இதயங்கள் சுக்கு நூறாக இடிந்து போனது.