Tuesday, 6 December 2011

பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்று கடமை...


சென்னை: பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ஐ முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"1992 டிசம்பர் 6 " மதச்சாற்பற்ற இந்திய தேசத்திற்கு எதிராக ஃபாசிஸ சங்கப்பரிவார குண்டர்கள் தொடுத்த தாக்குதல், இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கிய நாள், 600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இறையில்லமான பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.



ஒவ்வொரு வருடமும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டிசம்பர் 6ஐ "ஃபாசிஸ எதிர்ப்பு தினம்" என்று கடைபிடித்து வருகிறது. கடந்த வருடம் அலஹாபாத் உயர் நீதி மன்றம் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் ஒரு அநீதியான தீர்ப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை விட்டு விடலாம் என்ற எண்ணம் முழைக்கத்தொடங்கிய போது இந்த சமூகம் ஒரு போதும் இதனை மறந்துவிடக்கூடாது என்றும் எத்துனை ஆண்டுகளாயினும் பாபரி மஸ்ஜிதின் வரலாற்றை ஒவ்வொரு தலைமுறையினருக்கும் எடுத்துச்செல்வோம் என்ற வகையில் " நீதி தேடும் பாபரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் இந்தியா முழுவதுவம் மாபெரும் பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டது. இந்த பிரச்சாரத்தின் வியூகமாக பாபரி மஸ்ஜிதின் வரலாற்றை விளக்கிக்கூறும் நாடகங்களும் நடைபெற்றது. இத்தகைய பிரச்சாரம் பொதுமக்களிடையே மிகப்பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு இந்த வருடம் பாப்புலர் ஃப்ரண்டின்  காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக மாபெரும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்று கடமை என்ற தலைப்பில் இன்று மாலை சரியாக 6:30 மணி அளவில் பல்லாவரம் ஹினாயத் மஹாலில் வைத்து நடைபெறும். இதில் சிறப்பு பேச்சாளர்களாக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் சென்னை மாவட்டதின் தலைவர் முஹம்மது நாஜிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.


பாபரி மஸ்ஜித் மீட்புக்குழுவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment