Wednesday 29 June 2011

தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு

தற்போதைய செய்தி கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கடந்த 20-ந்தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வருகிற 1-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் அங்குள்ள அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூரில் புதிய கார் தொழிற்சாலை

தற்போதைய செய்தி தமிழக அரசு இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


முதல் – அமைச்சர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று மதியம் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ஏ. பியூஜியாட் சிட்ரியான் கார் நிறுவன நிர்வாகிகள் கிரிகோரி ஆலிவர், பிரெடரிக், ஜிதேஷ் கார்டியா, சஞ்யூவ் சகா, சாஸ்ஸிகந்த், வைத்தியநாதன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த கார் தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்தனர்.

முஸ்லிம்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?

நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?
இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...

இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.


யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......


உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.

முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு...

தமிழ்நாட்டில்ஜுன் முதல் டிசம்பர் மாதம் வரை ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அதில்“மதம்” என்ற கேள்விக்கு“இஸ்லாம்” என்று குறிப்பிடவும்…. “முஸ்லிம்” என்பது பதிவது தவறு.

இன்னும்“ஜாதி” என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்…

இன்றைய திருமணமும் இஸ்லாமிய திருமணமும்

இன்றைய திருமணம் என்பது கோடிகளை கொட்டி கும்மாளமிடும் விழாவாக ஆகிவிட்டது. இன்றைய அரசியல் வாதிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து பண முதலைகளும் மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு காசை கரியாக்கி சினிமா செட் அமைப்பது போல் வெகு விமரிசையாக திருமணத்தை நடத்துவதை பார்க்க முடிகின்றது. ஒரு காலத்தில் எளிமையான திருமணத்தை நடத்தி மக்களில் நாங்களும் சமமானவர்கள் என்று கூறும் அளவுக்கு உள்ள அரசியல்வாதிகளும் உண்டு. ஆனால் இன்றைய பணம் படைத்த செல்வந்தவர்கள் தங்கள் செல்வாக்கினை நிலை நிறுத்த திருமணம் என்ற போர்வையில் வீண் வீரயங்கள் நடத்துவதை பார்க்க முடிகின்றது. திருமண விருந்து என்ற பெயரில் இன்றைய விருந்துகளில் எத்தனை ஆடம்பரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.ஆடம்பரம் இல்லாத விருந்து

ஷைத்தானுடன் ஓர் உரையாடல்

ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான  பாங்கொலி  கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில்  எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக “விடிவதற்கு இன்னும் நேரம்
இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு” என்றான்.

மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு

அம்ஸ்டர்டம் : முஸ்லீம்கள் மிருகங்களை உயிரோடு இருக்கும் போது அறுத்து சாப்பிடுவர். இப்படி அறுக்கப்படும் முறையை ஹலால் முறை என்றும் அப்படி அறுக்கப்படும் மிருகங்களையே உண்பர். இச்சூழலில் நெதர்லாந்தில் உயிரோடு ஹலால் முறையில் மிருகங்களை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1400 வருடங்கள் தொண்மையான மசூதியில் புணரமைப்பு வேலை!

இந்தியாவிலேயே முதன்மையானதும், மிகவும் பழமையானதும் என நம்பப்படும், கேரளத்தில் கொடுங்களூரில் உள்ள சேரமான் ஜும்மா மசூதி அதன் உண்மையான தொண்மை வடிவில் கட்டப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் இதன் புணரமைப்பு பணிகளுக்கு இம்மசூதியின் நிர்வாகக் குழு இறுதி வடிவம் கொடுத்துள்ளதாக மசூதியின் நிர்வாகத் தலைவர் பி.ஏ.முகமது சையது கூறியுள்ளார்.

பெற்றோரைத் தவிக்கவிடுவோருக்கு கடும் தண்டனை

பெற்றோரைக் கவனிக்காமல் தவிக்கவிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.


பெற்ற மக்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் தங்களது சாதாரண வாழ்க்கைத் தேவைக்கான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ உதவி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யவும், இவற்றுக்கான செலவுக்கு பொருளாதார உதவி கிடைக்கச் செய்யும் வகையிலும் மத்திய அரசு ‘பெற்றோர் மற்றும் முதியோர் நலச்சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009’ என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் என்னென்ன ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும் ?

முதலில் எந்த நீதிமன்றத்தில் வழக்குப்போடப் போகிறீர்கள் எனபதை தீர்மானிக்க வேண்டும். திருமணமான இடம் அல்லது கணவன் மனைவி வாழ்ந்த இடமாக இருக்கலாம். இந்து திருமணச் சட்டம், இந்திய விவாகரத்துச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இஸ்லாமிய திருமண முறிவுச் சட்டம் ஆகியவற்றின்கீழ் பதிவுசெய்ய, என்ன காரணத்தின் பேரில் விவாகரத்து பதிவு செய்கிறோம் என்பதைப் பொறுத்து ஆவணங்கள் எவை என்பதைக் கூறலாம்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: நாளை முதல் தொடக்கம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பும், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பும் நாளை தொடங்குகிறது.


திரிபுரா மாநிலத்தில் நாளை தொடங்கி வைக்கப்படும் இத்திட்டம், சமூக நலத்திட்டங்களுக்கு தகுதியுடைய ஏழைகளை கண்டறிய அரசுக்கு உதவியாக இருக்கும். இதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எகிப்தில் மீண்டும் கலவரம்: பலர் படுகாயம்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் சதுக்கத்தில் புதிய மோதல்கள் வெடித்து உள்ளன. அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் போலிசார்  இடையே கடுமையான சண்டைகள் நடைபெற்றன.


போராட்டத்தை கலைப்பதற்கு போராட்டக்காரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினார்கள். அப்போது பலர் போலிசார் மீது கற்களை வீசினார்கள். தாகிர் சதுக்கம் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய புரட்சி போராட்டத்திற்கு முக்கிய களம் ஆகும்.

மும்பையில் மீண்டும் ஸ்வைன் ப்ளூ அபாயம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டை உலுக்கி வந்த ஸ்வன் ப்ளூ மீண்டும் தன் கோர முகத்தை காட்டியுள்ளது.

மும்பையில் சாண்டிவ்லி என்ற இடத்தில் 37 வயது பெண் ஒருவரும், 3 வய்து பெண் குழந்தையும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பெல் பணிக்காக 13,673 பேர் தேர்வு எழுதினர்

திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) 475 கைவினைஞர்கள் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வு முடிவுகள் ஜூலை 2-ம் தேதி பிற்பகல் வெளியாகும். இந்த முடிவுகளை இணையதளத்தில் காணலாம். இருபது மாநிலங்களைச் சேர்ந்த 13,673 பேர் இந்த தேர்வினை எழுதினர்.

பி.எல்.படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீடிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு பி.எல். (ஆனர்ஸ்) படிப்பிற்கும் அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள 3 ஆண்டு பி.எல்.படிப்பிற்கும் விண்ணப்பம் பெறவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும் 20-ந் தேதிவரை நீடிக்கப்படுகிறது.
இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

"ரிஷானா நஃபீக்கை விடுவிக்க வேண்டும்" : சவுதி அரசுக்கு வேண்டுகோள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட இலங்கைப்
பணிப்பெண்ணான ரிஷானா நஃபீக்கை
விடுதலை செய்ய வேண்டும் என்று
கோரி கொழும்பில் உள்ள சவுதி
தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
ஒன்று நடைபெற்றிருக்கிறது.


                                                               
               
ரிஷானா நஃபீக்கின் உறவினர்கள்  

சிங்கூர் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் வழங்க சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை

டெல்லி: சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.




முஸ்லிம்களை படுகொலை செய்த வழக்கில் 21 வருடம் கழித்து வரும் தீர்ப்பு

பாட்னா:மதக் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு தாமதமாவதர்க்கும் மிகக் குறைவான தண்டனை அளிப்பதர்க்குமான தற்போதைய ஒரு எடுத்துக்காட்டு. பிகாரில் 21 வருடங்களுக்குப் முன்னர் நவாடா மாவட்டத்தில் குலினி கிராமத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.




இந்தியா-வங்கதேசம் கனவாய் பாதை விரைவில் திறப்பு !!!

ஷில்லாங் :  40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-வங்கதேசம் நாடுகளுக்கிடையே உள்ள ஹாட்ஸ் கனவாய் பாதை விரைவில் திறக்கப்படுகிறது. இதனால் இருநாடுகளுக்கிடையே மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் பர்தாவை புறக்கணிக்கும் போலீஸ் அதிகாரி

பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆஸ்திரேலியப்  போலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 


மேற்கு ஆஸ்திரேலிய போலிஸ் துணைக் கமிஷனர் கார்ல் ஓ கல்லகன் கூறுகையில்,"பர்தா, ஹெல்மெட் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை உபயோகிப்பது குறித்தும் அவற்றை அணிபவர்களை சோதனை செய்வது குறித்தும் உரிய சட்டத்திருத்தம் தேவை" என்றார்.

ஐ.எம்.எஃப். அமைப்பின் முதல் பெண் தலைவர் கிறிஸ்டைன் லகார்டே

வாஷிங்டன், ஜூன் 28: பன்னாட்டு செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) அடுத்த தலைவராக பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்டே (55) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த அமைப்பின் முதலாவது பெண் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார்.

மத்திய அரசின் புதிய வருவாய்த்துறை செயலர் ஆர்.எஸ்.குஜ்ரால்

புது தில்லி,ஜூன் 28: மத்திய அரசின் வருவாய்த் துறைச் செயலராக ஆர்.எஸ்.குஜ்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திற்கு புதிதாக 4 ரயில்கள்: தெற்கு ரயில்வே

சென்னை :  தமிழகத்தில் வரும் ஜுலை முதல் 4 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இது தொடர்பான அறிவிப்பு 2011 - 2012-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டின் போது, அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு:கேரளாவைச்சார்ந்த சுரேஷ் நாயர் உள்பட நான்குபேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

புதுடெல்லி:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரளாவைச்சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி சுரேஷ் நாயர் உள்பட நான்கு பேரை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.



லிபிய அதிபர் கடாபிக்கு எதிரான கைது வாரண்டை லிபியா நிராகரிப்பு

திரிபோலி: லிபிய அதிபர் முவாம்மர் கடாபிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டை லிபியா நிராகரித்துள்ளது.


இது குறித்து லிபிய நீதித்துறை அமைச்சர் முகமது அல்-காமூதி கூறுகையில், "மேற்கத்திய உலகின் கருவியாக இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எல்லாம் லிபியா ஏற்றுக் கொள்ளாது. கடாபி மற்றும் அவரது மகனுக்கு லிபிய அரசில் எந்த அதிகாரப்பூர்வமான பதவியும் இல்லை. அதனால் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை", என்றார்.

கத்தாரில் பெண்களுக்கு மட்டுமான தனி திரையரங்கம்

பெண்களை மட்டுமே அனுமதிக்கும் விசேச  திரையரங்கம் ஒன்று கத்தாரின்   தோஹா நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது.

குறித்த திரையரங்கமானது எஸ்பயர் சோன் பவுண்டேசனினால் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் விளையாட்டு வளாகத்தின் பெண்களுக்கான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கேஸ் விலை ரூ 14.73 குறைப்பு! - முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி 4 சதவீதம் குறைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் மூலம் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ 14.73 குறையும்.


வரும் ஜூலை 1-ம்தேதி முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

காசாவுக்கு வரும் சர்வதேச கப்பல்களை தடுத்த நிறுத்த இஸ்ரேல் முடிவு

பாலஸ்தீனம் காசா திட்டுப் பகுதியில் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை உதவி பொருட்களை வழங்குவதற்காக 10 கப்பல்களில் உணவு பொருட்கள் சென்றுள்ளன.


இந்த சர்வதேச கப்பல்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் நிவாரண கப்பல்களுடன் கடுமையாக மோத வேண்டாம் என கடற்படைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டு உள்ளது.